செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

முன்னாள் போராளி ஒருவரின் கடந்தகால வாழ்க்கைப் போராட்டத்தின் போது...

எனது பெயர் சுமன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் மன்னார் வைத்தியசாலையில் பிறந்தேன். அம்மா என்னைப் பெற்றவுடனே இறந்து போய் விட்டார்.அம்மாவை நான் பார்த்ததில்லை. அப்பா என்னை வளர்ப்பதற்காக பக்கத்து வீட்டில் கொடுத்துள்ளார்.பின்னர் நான் அங்கே அதே தினத்தில் பிறந்த பெண் பிள்ளையுடன் வளர்ந்தேன்;.என்னால் தரம் ஒன்று மட்டுமே படிக்க முடியுமாக இருந்தது.மன்னார் பேசாலை தமிழ்க்கலவன் பாடசாலையில் படித்தேன்.

அப்பாவும் எனது சிறிய வயதில் இறந்து போய்விட்டார் அதுவும் எனக்குத் தெரியாது. அம்மா அப்பா பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.நான் அவர்களை பார்த்ததேயில்லை. என்னை அப்பா வளர்க்கக் கொடுத்த இடத்தில் அவர்கள் தங்கள் பிள்ளை போன்று என்னை பார்க்கவில்லை.என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.இதன் காரணமாக நான் அவர்களின் தங்கை வீட்டிற்கு வந்தேன்.அந்தச் சந்தர்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மூலைச்சலவை செய்து ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தார்கள். 1989கடைசி என நினைக்கின்றேன் அப்போது எனக்கு பதினாறுவயது சிறிய வயதில் தாய் தந்தையை இழந்ததாலும் எனக்காக ஒருவரும் இல்லை என்ற விரக்தியுடனும் இருந்த நான் அவர்களின் மூலைச்சலவையில் சிக்கி மன்னாரில் வைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன்.

இரண்டு கிழமை போலித்துப்பாக்கியில் எனக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் நான் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பிரதேசத்திற்கு காயமடைந்த உறுப்பினர்ளை பராமரிக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அதன் பின்னர் எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தரப்பட்டது. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதே எனது பணி. அங்கு ஆறுமாதங்கள் வாகனம் ஓட்டினேன். தொடர்ந்து எனக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருக்க விருப்பமில்லாமல் 1991இல் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்து விட்டு விலகி வந்தேன். பின்னர் முன்பு இருந்த அன்டி வீட்டிற்கே வந்தேன்.அதன் பின்னர்;

நடந்த உக்கிர மோதல் காரணமாக 1994இல் கொக்காவிலிலிருந்த வன்னிக்கு இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பிற்கு வந்தேன்.அங்கு எனக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது அதன் பின்னர் நாங்கள் இருவரும் 2000ம் ஆண்டில்; புதுக்குடியிருப்பில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அந்தக் கால கட்டத்தில் எனது மனைவி உயர்தரம் படித்து முடித்து கணணித்துறையில் வேலை செய்து கொண்டிருந்தார். நான் புதுக்குடியிருப்பில் புடவைக்கடையில் ஒன்றில் வேலை செய்தேன் ஆரம்பத்தில் எனக்கு 1000ரூபா சம்பளம் தரப்பட்டது. எனது மனைவியின் குடும்பத்தில்; அம்மா, அப்பா உற்பட 03பெண்கள் 02ஆண்கள்; அடங்கலாக மொத்தம் 07பேர் மனைவியின் சகோதரர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டார்கள். 2001புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எனது மூத்த மகன் பிறந்தார். பின் 2006எனது மகள் பிறந்தார். 2007.09.27மூண்றாவது முறையாகவும் பெண் பிள்ளை யொன்று பிறந்தது.

யுத்தம் உக்கிரத்தை அடைந்ததால் நாங்கள் சிறிது காலம் காட்டில் வாழ்ந்தோம். அக்கால கட்டத்தில் உணவே கிடைக்கவில்லை. சில வேளைகளில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒரு வேளை உணவு உண்போம் அதுவும் கிடைக்காமலும் பல முறை இருந்திருக்கின்றோம். இதனால் எனது மனைவியின் உடலில் அளவுக்கு அதிமாக அமிலம் சுரக்கப்பட்டு இதயத்தில் ஒரு வால்வு சேதமடைந்து விட்டது. காரணம் சாப்பாடின்மை 70%இருக்க வேண்டிய அமிலத்தின்; அளவு 270% அதிகரித்ததால்; வால்வை அரித்து விட்டது எனது மகனுக்கும் இரண்டு வால்விலும் அடைப்பு உள்ளது.
2006ம் ஆண்டில் பிறந்த எனது மகளுக்கும் இதே பிரச்சினை உள்ளது 2010ம் ஆண்டு சத்திரகிச்சை செய்தும் சரிவரவில்லை. நான் இயக்கத்தில் 18மாதங்கள் இருந்தேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சில நல்ல விடயங்களும் இருந்தன குறிப்பிட்டுக் கூறுவதாயின் முதியோர் கல்வித்திட்டம் இருந்தது. அதற்கு வயது வேறுபாடில்லை அதே போன்று கெட்ட விடயங்களும் இருந்தன படித்தவன் படிக்காதவன் யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற மாவட்ட பாகுபாடு இருந்தது. யாருக்காக இவைகளைச் செய்ய வேண்டும் எதற்காக செய்ய வேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்ததால் இயக்கத்தை விட்டு 1991கடைசியில் விலகினேன்.

எப்போதுமே என்னுள் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு தொடர்பும் இன்றி வன்னி வந்த மக்கள் 2010ம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் துன்பத்திலேயே வசிக்கின்றார்கள்.நான் இயக்கத்தில் இருந்து விலகினாலும் எனக்கான விசாரணை இன்னும் தொடர்கின்றது.3மாதம் 6மாதம் என்று இராணுவ அதிகாரிகள் மாறும் போது விசாரிப்பாரகள்; 3அல்லது 4மணி நேரம் விசாரணை செய்வார்கள் விரல் அடையாளம் புகைப்படம் எடுத்து விட்டு அனுப்புவார்கள்.
வட பகுதி மக்களுக்கு தேவை அபிவிருத்தி தற்போது யாழ்ப்பாணம் அரியாலை சாவகச்சேரிக்கு ஆட்டோவில் வருவதாக இருந்தால் 300ரூபா செலவாகின்றது.

2009.4.13அன்று எங்களை இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுமதித்தார்கள். 23ம் திகதி வவுனியா மகாவித்தியாலயத்தில் பிரச்சினை நடந்ததால் பின்னர் புதுமாத்தளனில் இருந்து 3சிறு கடல் கடந்து ஓமந்தை வந்தோம் பின் பஸ்ஸில் வவுனியா மத்திய கல்லூரிக்கு வந்தோம்.

இறுதிக்கட்டப் போரில் வன்னியில் கோர்வைக்குண்டு கொத்துக்குண்டு பல் குழல் எறிகணை தாக்குதல் விமானத்தாக்குதல் எல்லாமே நடைபெற்றன.
இறுதிக்கட்டத்தில் புலிகளை வெறுத்தோம் பலர் பங்கருக்குள் பதுங்கி இருந்தார்கள். அவர்களையும் தேடி புலிகள் பிடித்துச் சென்றார்கள்.குறிப்பாக பிள்ளைகளை எடுத்துச்சென்றனர். ஒருகிழமை பயிற்சி பெற்ற பின் யுத்தத்திற்கு அனுப்பினார்கள். பின் அவர்களும் சடலமாகவே வந்தனர்.16-45வயது வரை உள்ளவர்களை படைகளில் சேர்த்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் எதுவுமே பார்க்கவில்லை செத்தாலும் பரவாயில்லை பிள்ளைகளைகளையாவது காப்பாற்றுவோம் என்றுதான் வெளிக்கிட்டோம். எனது மகனுக்கு சாப்பாடு இல்லாமல் தான் இந்த சுவாச நோய் வந்தது.
இரண்டு வருடங்கள் இராணுவத்தினர் தந்த பருப்பையும் அரிசியையும் உப்பையும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டோம்;. அதனால் பிள்ளைகளுக்கு வாந்தி பேதி வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் போனது. பொருட்களை முதலாளிமார் அதிக விலைக்கு விற்றார்கள். மிளகாய்த்தூள் ஒரு கிலோ ஆறாயிரம் ரூபா தேங்காய்த்துண்டு 100 - 200ரூபா தீப்பெட்டி - இருபதுரூபா புதுக்குடியிருப்பு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடந்த யுத்தத்திலிருந்து…..

முப்பதாயிரம்பெறுமதியான தங்கத்தை மூவாயிரம் ரூபாவிற்கு வாங்கினார்கள் விடுதலைப்புலிகள்.

மக்களிடம் பணம் இல்லாதால் இந்த நிலைமை. நான் இயக்கத்தை விட்டு விலகி 18வருடங்கள் ஆகின்றன .

ஆனாலும் எனது விசாரணை இன்னமும் தொடர்கிறது…..
இப்படியாக வடபகுதியில் பலர் இருக்கின்றார்கள்.என்றார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல