திங்கள், 18 பிப்ரவரி, 2013

புலம்பெயர் தமிழ் பையனின் மனித நேய பிறந்த நாள்!

பிரித்தானியாவில் லண்டனில் பெற்றோருடன் வசித்து வருகின்ற புலம்பெயர் தமிழ் சிறுவன் ஒருவர் அவரது 12 ஆவது பிறந்த தினத்தை மிகவும் வித்தியாசமான முறையில் மனித நேயத்துடன் கொண்டாடி உள்ளார்.

இவரது பெயர் சற்குணேஸ்வரன் சாயிநிஷாந். மட்டக்களப்பில் திருப்பழுகாமத்தில் சிறிய குடிசை ஒன்றில் இரண்டு குழந்தைகள், வயதான தாய் ஆகியோருடன் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற இருதய நோயாளியான ரவி ரஞ்சினி என்கிற விதவை குறித்து இணைய ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டார் இவர்.

இக்குடும்பத்துக்கு மனித நேய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

வீட்டில் உண்டியலில் இவர் தினமும் பணம் சேர்த்து வந்திருக்கின்றார்.

இவ்வுண்டியல் பணத்தைக் கொண்டு மடக்களப்பைச் சேர்ந்த சமூக நலன்புரி அமைப்பின் ஊடாக ரஞ்சினியின் குடும்பத்துக்கு உடுதுணிகள், உணவுப் பொருட்கள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து உள்ளார்.

எதிர்காலத்திலும் தொடர்ந்து இவ்வாறான மனிதநேய பணிகளை மேற்கொள்வார் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு இச்சிறுவன் தெரிவித்து உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல