சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை துணிகளில் நச்சுத் தன்மை கலந்திருந்ததால், அந்தச் சீருடைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஷாங்காய் நகரத்தில் செயல்படும் துணி தயாரிப்பு நிறுவனங்களில், மாநகராட்சியை சேர்ந்த தரம் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு பிரிவினர், தரஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆக்ஸியா ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் துணிகளை ஆய்வு செய்தபோது, சாயம் ஏற்றுவதற்காக தடைசெய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரசாயனம் புற்று நோயை தோற்றுவிக்கும் தன்மையுடைது ஆகும்.
இந்நிறுவனம், ஷாங்காய் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சீருடை துணிகளை தயாரித்து அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாங்கிய 21 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் சீருடையை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த துணிகள் தரநிர்ணய பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக