வியாழன், 7 மார்ச், 2013

ஒரு வரலாறு விடைபெறுகின்றது!

வெனிசுலா நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் - வயது 58 புற்று நோயால் நேற்று முன் தினம் காலமானார்.

இவரின் மறைவை ஒட்டி கவிஞர் விந்தனால் பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதை....


ஒரு வரலாறு

விடைபெற்று செல்கிறது....

உலக வல்லாதிக்கத்தின்

உத்தரவுக்கு பணியாத

வலிய குரலின்

உயிர் மூச்சு நின்று போனது...

வெனிசூலாவின்

வேர்களில் இருந்து

அகிலத்தின் திசையெங்கும்

உறுதி விழுதெறிந்தவன்

இந்த சாவேஸ் என்ற

சரித்திர சாதனையாளன்....

கீரைப்பாத்தி அளவு

சிறுதேசம் என்றால் என்ன..

அகன்ற சாம்ராச்சியங்களின்

முதுகு சொறிவதா?......

சிம்ம சொற்பனமாய் எழுந்து

அர்த்தம் கொடுத்தவன்...

வித்திட்டவன் வீழினும்

விதைகள் கருகுவதில்லை..
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல