திங்கள், 25 மார்ச், 2013

என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள்.

இது பற்றிக் குறித்து வைத்திட பைல் புராபர்ட்டீஸ் என்று ஒரு விண்டோ ஒவ்வொரு பைலிலும் உள்ளது. இதில் பைல் குறித்த பல்வேறு தகவல்களைத் தர முடியும்.
பைலைக் கையாளும் ஒவ்வொருவரும் இதில் என்று யாரால் பைல் படிக்கப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது என எழுத முடியும்.

இதற்கு ஒரு பைலில் “File” மெனு கிளிக் செய்து அதில் வரும் “Properties” பிரிவைத் தேர்ந்தெடுத்தால் இந்த தகவல்களை உள்ளிட விண்டோ ஒன்று “Summary”, “Custom” போன்ற பல டேப்களுடன் கிடைக்கும்.

இதிலும் title, subject, author, manager, category, keywords, comments எனப் பல பிரிவுகள் இருக்கும்.

இதில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் பைல் குறித்த தகவல்களை நீங்கள் உள்ளிடலாம்.

அது சரி! ஞாபகமாக ஒவ்வொரு முறையும் பைலினை எடிட் செய்து மூடுகையில் இந்த தகவல்களை உள்ளீடு செய்திட வேண்டுமே! நாம்தான் வேலை முடிந்த பின் பைலை மூடிச் செல்வதில் தானே கண்ணும் கருத்துமாக இருப்போம். நமக்கு யார் இதனை ஞாபகமூட்டும் வேலையை யார் செய்வார்கள்? என்று எண்ணுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். எக்ஸெல் ஒர்க்புக்கே செய்திடும்.

இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.

1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.

3. இதில் “Prompt for workbook properties” என்னும் பிரிவில் செக் செய்திடவும்.

4. இதன்பின் ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி ஒவ்வொரு முறை நீங்கள் எக்ஸெல் ஒர்க்புக்கினை சேவ் செய்து மூடப் போகையில் "என்னங்க! பெர்சனல் தகவல்களைப் போடலியா?' என்று எக்ஸெல் உங்களுக்கு நினைவூட்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல