உணவு பொருட்களை மறு சுழற்சி செய்யும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். இரவில் மீதமாகும் அரிசி சாதத்தை, தண்ணீர் ஊற்றி வைத்துவிடுங்கள். மறுநாள் இட்லிக்கு அரிசி அரைக்கும் போது அதனுடன் இந்த சாதத்தை சேர்த்து அரைத்தால் அன்றிரவே இட்லி ஊற்றி சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
கீரையை எடுத்துவிட்டு தண்டினை தூக்கி எறியாமல் பொறியல் செய்வது, புதினா கீரையைப் பறித்துவிட்டு அதன் தண்டை தொட்டியிலோ அல்லது தரையிலோ புதைத்து வைக்கலாம்.
வீணாகும் தக்காளி போன்றவற்றை குப்பையில் போடாமல், வீட்டின் தோட்டத்தில் போட்டால் செடி வளரும் வாய்ப்புள்ளது.
இது போல எதை எல்லாம் வீணாக்காமல் தவிர்க்க முடியுமோ அதனை செய்யுங்கள்.
பழையவைக்கு முன்னுரிமை
எந்த ஒரு பொருளை வாங்கி வந்தாலும், அதற்கு முன்பு வீட்டில் இருக்கும் அதே ரக பொருளுக்கு பின்னால் புதிய பொருளை வையுங்கள். முதலில் முன்பு வாங்கிய பொருளை பயன்படுத்துகிறோமா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
குறைவாக பரிமாறுங்கள்
வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறும் போது தட்டு முழுவதும் பரிமாறாமல், குறைவாக பரிமாறினால், அதனை சாப்பிட்டதும் இன்னும் கொஞ்சம் உணவை வைக்கலாம். இது குழந்தைகளுக்கு முற்றிலும் பொருந்தும். இதனால் தட்டில் உணவு வீணாவதை தவிர்க்கலாம்.
தேவையான அளவுக்கு வாங்குங்கள்
காய்கறிகளை கால் கிலோ, அரை கிலோ என வாங்காமல், உங்களுக்குத் தேவையான அளவுக்கு வாங்குங்கள். இருவர் இருக்கும் வீடுகளில் கால் கிலோ காய் என்பதே அதிகம்தான். அவ்வாறானவர்கள், கால் கிலோ எடைக்கு ஒரே விலையுள்ள இரண்டு காய்களை சமமாக எடை போட்டு வாங்கிக் கொள்ளலாம். பேக் செய்யப்பட்ட காய்கறிகளை வாங்குவதால் வீணாவது அதிகரிக்கும்.
விலைக் குறைவை பயன்படுத்துங்கள்
விலைக் குறைவாக இருக்கிறது என்பதற்காக 1 கிலோவுக்கு பதிலாக 2 கிலோ வாங்கி வைத்துக் கொள்வோம். ஆனால் 1 கிலோ பொருளை பயன்படுத்துவதற்குள் இரண்டாவது கிலோ கெட்டுப் போய்விடலாம். இதனால், நாம் பயன்படுத்திய 1 கிலோ பொருளுக்கு நாம் கொடுத்த விலை அதிகமாக ஆகிறதல்லவா. எனவே விலை குறைந்தாலும் தேவையான அளவுக்கு மட்டுமே வாங்கினால்தான் அந்த விலை குறைவை நாம் பயன்படுத்தியதாக ஆகும்.
தோட்டங்களை உருவாக்குங்கள்
பொதுவாக வீடுகளில் இட வசதி இருப்பவர்கள் தோட்டங்களை உருவாக்குங்கள். அப்போது, சமையலறையில் வீணாகும் பொருட்களை ஒரு பள்ளம் தோண்டி அதில் கொட்டி வாருங்கள். சிறிது நாள் கழித்து பள்ளத்தை மூடிவிடுங்கள். 6 மாதம் கழித்து அந்த பள்ளத்தை தோண்டி அந்த உர மண்ணை செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதுதான் இயற்கை உரமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக