வெள்ளி, 31 மே, 2013

’காதலித்த பெண்ணை வேண்டாம் என்றேன்’ – கருணாநிதி தகவல்!

”நான் காதலித்த பெண்ணின் பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக்கொண்டால் தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறினார் கருணாநிதி!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் இல்லத் திருமணத்தை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னையில் நேற்று நடத்தி வைத்தார்.அப்போது பேசிய கருணாநிதி,”பொதுக் கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும், நான் பயணம் செல்லும் போது சாலை வழிகளிலும் நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் தனியாக பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தத் திருமணங்கள் மிக எளிதாகவும், சிக்கனமாகவும், ஆடம்பரம் இல்லாமலும் நடைபெறவேண்டும் என்பதற்காகத் தான், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இந்தத் திருமண முறையை அறிமுகப்படுத்தியது மாத்திரமல்ல; அண்ணாவுடைய ஆட்சிக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தையும் இயற்றி நமக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறார்கள்.

நான் 1944–ம் ஆண்டு நடைபெற்ற என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், நான் உங்களிடத்திலே உரிமையோடு சொல்லிக் கொள்கிறேன்.:நான் காதலித்த பெண்ணை திருமணம் செ#து கொள்ள முடியாமல் அவர்களுடைய பெற்றோர், உற்றார், உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது; வைதீகத் திருமணம் நடத்திக் கொண்டால் தான் பெண் தருவோம்’ என கூறினர். ஆனால் அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்.

அதற்கு பின் நான் பெண் எடுத்த ஊர் திருமாகாளம். அந்த ஊர் பெண் தான் தயாளு. எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தான், அழகிரி, ஸ்டாலின், தமிழ் மற்றும் செல்வி என்பவர்கள். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் வாழ்வில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டு விடவில்லை.ஏற்பட்ட சிக்கலே திருமணத்திற்கு சம்மதிப்பதற்காக வந்த சிக்கலே தவிர வேறு எதுவும் இல்லை”.என்று கருணாநிதி பேசினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல