சனி, 8 ஜூன், 2013

பல வருடங்களாக விடைதெரியாத கணக்குக்கு விடை சொல்லி 5.60 கோடி பரிசை பெற்றுக்கொள்ளவும்!

நீங்கள் கணக்கில் சூரப்புலியா? இந்த ‘கணக்குப் போடும்’ திறமை மூலம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்படியென்றால், கடந்த பல வருடங்களாக தீர்வு கிடைக்காத இந்த கணக்குக்கு விடை சொன்னால் உங்களுக்கு ரூ.5.60 கோடி பரிசு கிடைக்குமாக்கும்.முயற்சி பண்ணுங்களேன்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆன்டி பீல். கோடீஸ்வரர். கணக்கின் மீது தீராத காதல் கொண்டவர். அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கணித அமைப்பு (ஏஎம்எஸ்) ஒரு புதிய யூக வடிவ, சவால் கணக்கு ஒன்றை வெளியிட்டது. இதற்கு யாராவது தீர்வு கண்டால், அதற்கு ரூ.2.80 லட்சம் பரிசு தருவதாக, 1997ல் ஆன்டி பீல் அறிவித்தார்.

ஆனால், 17 ஆண்டுகளாகியும் கூட ஏஎம்எஸ்ஸின் யூக கணக்குக்கு யாராலும் தீர்வு காண முடியவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த கணக்குக்கான பரிசுத் தொகையை ரூ.5.60 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் ஆன்டி பீல். இதையடுத்து இந்த கணக்கின் பெயரை, ‘பீல் கன்ஜெக்ஜர்’ என்று பெயர் சூட்டியுள்ளது, ஏஎம்எஸ். இதே போல், இதற்கான பரிசுத் தொகைக்கு, ‘பீல் பரிசு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வளவு மதிப்பு வாய்ந்த அந்த கணக்கு: Ax+By=Cz. A, B, C, x, y, z ஆகியவை நேர்மறை முழு எண்கள். மேலும், x, y, z ஆகியவை 2ஐ விட பெரியவை. மேலும் , A, B, C ஆகியவை கட்டாயமாக பிரதம பொது காரணியாக இருக்க வேண்டும். விடை தெரிந் தால், ஏஎம்எஸ் அமைப்பிடம் நீங்களும் விண்ணப்பிக்கலாம

மேலும் விவரங்களுக்கு :http://en.wikipedia.org/wiki/Beal’s_conjecture
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல