இந்த உலகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதை அனுபவிக்கும் முன் அதனைப் பற்றி அனுபவம் உள்ளவர்களிடம் முழுவதுமாக கேட்டு தெரிந்து கொண்டால் தான் அதில் முழுமையாக ஈடுபடலாம். அப்படிப்பட்ட ஒன்று தான் டேட்டிங். உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இந்த விளையாட்டில் இறங்கி, தவறுகள் மூலம் பாடம் கற்பதை விட, இதில் உள்ள நல்லது கெட்டதை பற்றி முன்பே அறிந்து, அதன் பின் செயலில் இறங்குவதே பாதுகாப்பானதாகும்.
டேட்டிங் செல்வதால்! உறவுகள் வளரவும், மனது ஒத்து போகவில்லையென்றால் இந்த உறவு பிரியவும் செய்யும். சில நேரம் நமக்கு ஆபத்தை தரும் வகையிலும் போய் முடியும். அதனால் நாம் சொன்னது போல் அனுபவம் பெற்றவர்களிடம் டிப்ஸ் பெறலாம். இணையதளத்தின் மூலம் அல்லது பொதுவான டேட்டிங்கில் ஈடுபட்டவர்களிடம், அவர்களுடைய அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ இதில் அனுபவம் உள்ள பெண்கள், இந்த விளையாட்டில் புதிதாக அடியெடுத்து வைக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வைத்திருக்கின்றனர்.
பெண்களிடம் இருந்து பெற்ற இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால், டேட்டிங் செல்லும் போது தேவையற்ற பயத்தை உதறி விட்டு, அமைதியுடன் சந்தோஷத்துடன் இருக்கலாம்.
தனித்துவத்தை காத்திடுங்கள்
முதல் டேட்
தனிமையான ஒரு இடத்தில் சந்திப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளாதீர்கள். அவரை ஒரு உணவகத்தில் சந்திக்க போகிறீர்களா? அப்படியானால் அந்த உணவகம் கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முதல் சந்திப்பின் நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் வேண்டும். அடுத்தடுத்து நடக்கும் சில சந்திப்பிற்கும், இந்த கவனம் இருத்தல் அவசியம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கண்டிப்பாக சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டாம்.
குடும்பத்தாருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ யாரோடு, எங்கு, எப்போது செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். பத்திரமாக வீடு வந்து சேர்ந்த தகவலை தெரிவிப்பீர்கள் என்பதை சொல்லிவிடுங்கள். ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைப்பு வரவில்லை என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.
நேர்மை
எப்போதும் எதற்காகவும் நடிக்க வேண்டாம். சில காலம் வரை அவரை முட்டாளாக்கலாம்/ அனால் சீக்கிரமே உண்மையான நிறம் வெளிவரத் தொடங்கி விடும். உண்மையான பெண்களையே ஆண்கள் விரும்புவர். அவரை கவர பகட்டாக செயல்படுவது, புத்திசாலியாக காட்டுவது, நகைச்சுவை உணர்வை போலியாக வெளிப்படுத்துவது போன்றவைகள் உங்களையே முட்டாளாக்கி விடும்.
தயாராக இருக்கவும்
யாருக்குத் தெரியும்? இந்த உறவு நல்ல அலைவரிசையில் இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குக் கூட்டிச் செல்லலாம். அதனால் டேட்டிங்கை படுக்கையறையில் தொடர நேரிடலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நன்றாக குளித்திருக்க வேண்டும். உடம்பில் இருந்து வாடை வந்தால், குளித்த பின் நல்ல வாசனையுள்ள திரவத்தை உடம்பிற்கு பூசிக் கொள்ளுங்கள். உடம்பில் உள்ள தேவையற்ற ரோமங்களை ஆண்கள் விரும்ப மாட்டார்கள்; அதனால் அதை நீக்கவும் மறந்து விடாதீர்கள். பாதுகாப்பான உடலுறவு மிகவும் அவசியம், அதனால் பாதுகாப்பாக இருங்கள்.
மோசமான விளைவு
முதல் முறை டேட்டிங்கில் சந்திக்கிறீர்களா? அப்படியானால் சில நெருக்கடியான நிலைக்கு தயாராக இருக்கவும். தாக்க முற்பட்டால், மிளகு ஸ்ப்ரேயை (pepper spray) எப்போதும் பையில் வைத்திருங்கள் அல்லது கூர்மையான காலணியை வைத்து காலை நசுக்க முயற்சி செய்யுங்கள். அருகில் இருப்பவர் கவனத்தை ஈர்க்க கத்தி கூச்சலிட்டு ஊரை கூட்டுங்கள். இது தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்தும். மேலும் கிடைத்த இந்த சிறிய நேரத்தை தப்பித்து ஓட கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
Thatstamil

Image: from internet
இணையத்தளம் மூலம் டேட்டிங் செய்பவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். இணையதளத்தில் யாரையுமே நம்பக்கூடாது. பாதுகாப்பாக இருக்க விரும்பினால், அதற்கான ஒரே வழி, விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாமல் வைத்திருப்பதே. முழுப்பெயர், முகவரி, வாழும் ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் வெளிப்படுத்தக் கூடாது. முக்கியமாக தொலைபேசி எண்ணை கண்டிப்பாக சொல்லக் கூடாது. மேலும் குடும்பத்தைப் பற்றியோ, வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியோ வாயைத் திறக்கவே கூடாது.முதல் டேட்
தனிமையான ஒரு இடத்தில் சந்திப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளாதீர்கள். அவரை ஒரு உணவகத்தில் சந்திக்க போகிறீர்களா? அப்படியானால் அந்த உணவகம் கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முதல் சந்திப்பின் நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் வேண்டும். அடுத்தடுத்து நடக்கும் சில சந்திப்பிற்கும், இந்த கவனம் இருத்தல் அவசியம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கண்டிப்பாக சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டாம்.
குடும்பத்தாருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ யாரோடு, எங்கு, எப்போது செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். பத்திரமாக வீடு வந்து சேர்ந்த தகவலை தெரிவிப்பீர்கள் என்பதை சொல்லிவிடுங்கள். ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைப்பு வரவில்லை என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.
நேர்மை
எப்போதும் எதற்காகவும் நடிக்க வேண்டாம். சில காலம் வரை அவரை முட்டாளாக்கலாம்/ அனால் சீக்கிரமே உண்மையான நிறம் வெளிவரத் தொடங்கி விடும். உண்மையான பெண்களையே ஆண்கள் விரும்புவர். அவரை கவர பகட்டாக செயல்படுவது, புத்திசாலியாக காட்டுவது, நகைச்சுவை உணர்வை போலியாக வெளிப்படுத்துவது போன்றவைகள் உங்களையே முட்டாளாக்கி விடும்.
தயாராக இருக்கவும்
யாருக்குத் தெரியும்? இந்த உறவு நல்ல அலைவரிசையில் இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குக் கூட்டிச் செல்லலாம். அதனால் டேட்டிங்கை படுக்கையறையில் தொடர நேரிடலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நன்றாக குளித்திருக்க வேண்டும். உடம்பில் இருந்து வாடை வந்தால், குளித்த பின் நல்ல வாசனையுள்ள திரவத்தை உடம்பிற்கு பூசிக் கொள்ளுங்கள். உடம்பில் உள்ள தேவையற்ற ரோமங்களை ஆண்கள் விரும்ப மாட்டார்கள்; அதனால் அதை நீக்கவும் மறந்து விடாதீர்கள். பாதுகாப்பான உடலுறவு மிகவும் அவசியம், அதனால் பாதுகாப்பாக இருங்கள்.
மோசமான விளைவு
முதல் முறை டேட்டிங்கில் சந்திக்கிறீர்களா? அப்படியானால் சில நெருக்கடியான நிலைக்கு தயாராக இருக்கவும். தாக்க முற்பட்டால், மிளகு ஸ்ப்ரேயை (pepper spray) எப்போதும் பையில் வைத்திருங்கள் அல்லது கூர்மையான காலணியை வைத்து காலை நசுக்க முயற்சி செய்யுங்கள். அருகில் இருப்பவர் கவனத்தை ஈர்க்க கத்தி கூச்சலிட்டு ஊரை கூட்டுங்கள். இது தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்தும். மேலும் கிடைத்த இந்த சிறிய நேரத்தை தப்பித்து ஓட கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக