புதன், 3 ஜூலை, 2013

”ஒண்ணு”க்கும் உதவாத டயாபர்கள்: பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்

சமீபகாலமாக ஜப்பானில் வேலைக்கு செல்லும் பெண்கள் தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமில்லாததால் பெரியவர்களுக்கென் விற்பனையாகும் டயாபர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியை பார்த்த பிறகோ அல்ல்து அதற்கு முன்னாலேயோ இந்திய இளம் பெண்களிடமும் இப்பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது போன்ற டிஸ்போசபிள் டயாபர்களால் பல பெண்களுக்கும் ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு, உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. மேலும் இப்படி தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப் படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவில் இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை என்று தெரிய வருகிறது…

இது குறித்து இங்குள்ள சில பெண்களிடம் விசாரித்த போது,” இப்போதெல்லாம் எங்கே யார் எப்படியான கேமரா வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பாத்ரூம் போனால் கிட்டத்தட்ட மீண்டும் டிரஸ் போட்டுக் கொள்வது மாதிரிதான். அதையும் இப்போதெல்லாம் சிலர் படம் பிடித்து நெட்டில் போடுவதாக கேள்விபட்டு பயமாகி விட்டது. இதைத் தொடர்ந்தே என் ஃபேஸ் புக் தோழி சொன்ன ஐடியாபடி டயாபர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். இதனால், சிறுநீர் கழிக்க அடிக்கடி டாய்லெட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. அது மட்டுமின்றி அலுவலக நேரத்தில் இதனால் நிறைய நேரம் மிச்சமாகிறது” என் சொன்னார்கள் அப்பெண்கள்.

இதையடுத்துதான் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு கால இடையிலுள்ள தோல் சிவந்திருத்தல்,எரிச்சல் அல்லது டயாபர் அணிந்திருக்கும் பகுதியில் புள்ளிகள் அல்லது கொப்பளங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்கு மருத்துவர்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அது மட்டுமின்றி டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. அதையெல்லாம் விட டயாபரில் சிறு நீர் கழிக்காவிட்டாலும் நான்கு மணி நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தினாலே ஸ்கின் அலர்ஜி நிச்சயம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்!எனவே ‘ஒண்ணுக்கும்’ உதவாத இது போன்ற டயாபர்கள் பயன்படுத்தாமல் இரண்டுக்கும் அதிகமான பெண்கள் பாத்ரூமுக்கே போய் சிறு நீர் கழித்து வருதல் நலம் பயக்கும்!! -

by டாக்டர் செந்தில் வசந்த்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல