புதன், 3 ஜூலை, 2013

மழையில் நனைந்தபடி நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

மழையை கண்ட ஆனந்தத்தில் சினிமா நடிகை போல ‘தந்தான தந்தான தந்தான தனனே..’ என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் – சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. அத்துடன் உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது.

ஆனால்குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது பங்காளிதான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும், இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்தைரிப்போர்ட்டர்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல