செவ்வாய், 16 ஜூலை, 2013

கரட் அல்வா

கரட் அல்வா வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு. அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கரட் அல்வா செய்யலாம். பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை செய்திருப்பார்கள். இங்கு கரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய கரட் - 4 கப், பால் - 2 கப், தண்ணீர் - 1.5 கப், கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப், நெய் - 1 மேசைக் கரண்டி முந்திரி, - 12 உலர் திராட்சை, - 10 ஏலக்காய் பொடி, - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10--15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். (அதுவும் கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.) அடுத்து அதில் 'கண்டென்ஸ்ட் மில்க்' சேர்த்து நன்கு 2--3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, பிரட்டி விட வேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கரட் அல்வா தயார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல