விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற பெயரிலான அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப் பேரணி என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் வேட்பாளரான விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரனுக்கும் எதிராக எழுத்துப் பிழைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள்.
நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு வேட்பாளரான தம்பிராசாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, கூட்டமைப்பின் பெண் வேட்பாளரான அனந்தி சசிகரனுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை தெளிவாகப் படம் எடுக்க முடியாதவாறு சம்பவ இடத்தில் புகை எழும்பச் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், தங்களைப் படம் எடுக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தடுத்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பானவர்கள், வீடியோ மற்றும் சாதாரண கமராக்களைக் கொண்டு செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை படம் எடுத்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
எனினும் செய்தியாளர்கள், ஆர்பபாட்டக்காரர்களுடன் குறுக்கிட்டு பேச முடியாதவாறு தடுப்பதில் பொலிசார் பாரபட்சமாக ஈடுபட்டிருந்தாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BBC Tamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக