தலைவா படக்குழு உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு: கருணாநிதி பதைப்பு
சென்னை: தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கேட்டு பதைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் தேதி 17 ஆகியும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தை வெளியிட உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியது தலைவா படக்குழு.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் தலைவா படக்குழுவினருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஒரு படைப்பாளி என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதைக்கிறேன் என்று பதில் கூறினார்.
Thatstamil
தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!
சென்னை: தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை.சென்னை: தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கேட்டு பதைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் தேதி 17 ஆகியும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தை வெளியிட உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியது தலைவா படக்குழு.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் தலைவா படக்குழுவினருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஒரு படைப்பாளி என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதைக்கிறேன் என்று பதில் கூறினார்.
Thatstamil
தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!
சென்னை: தலைவா படத்தை வெளியில் கொண்டு வர பல தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் விஜய் தரப்பினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல்வரைச் சந்தித்து படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்கத் திட்டமிருந்தது விஜய் தரப்பு. ஆனால் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துவிட்டதாம்.
அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும், தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில் கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள்.
Thatstamil
"நம்ம கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதே: கவலையில் தளபதி "
சென்னை: தளபதி நடிகர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிப் போயுள்ளதாம்.தளபதி நடிகர் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படம் ரிலீஸாவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் ரிலீஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை.
முன்னதாக உலகநாயகனின் படத்திற்கு திடீர் தடை ஏற்பட்டு பின்னர் தாமதமாக ரிலீஸானபோது அது ஹிட்டானது. அதனால் தடை பட்டுள்ள தனது படமும் ரிலீஸான பிறகு நிச்சயம் ஹிட் தான் என்று தளபதி நம்பியிருந்தார். ஆனால் படத்தின் திருட்டு விசிடி விற்பனை ஜோராக நடப்பதால் மக்கள் அதை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர்.
இப்படி திருட்டு விசிடியில் படத்தை பார்த்தால் நாம் படத்தை ரிலீஸ் செய்தாலும் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்களே என்று நடிகர் கவலையில் உள்ளாராம். நாம் ஒரு கணக்கு போட்டு அது இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே என்று நடிகர் வருந்துகிறாராம்.
Thatstamil
தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலியால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் நடித்துள்ள தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படத்தை வெளியிட உதவி செய்யக் கோரி நடிகர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை வெளியிட உதவி செய்யுங்கள், இல்லை என்றால் நான் கடனாளியாகிவிடுவேன் என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டடார்.
பின்னர் படத்தை ரிலீஸ் செய்யக்கோரி படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நேற்று மாலை அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ஜெயினுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக