வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் குழந்தை

புரியாத புதிராகவே உள்ளதாக வைத்தியர்கள் வியப்பு; பெற்றோர் கண்ணீர்

உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ள போதிலும் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கிறது..!

திண்­டி­வனம் :

திண்­டி­வ­னத்தில் தனது பெற்­றோ­ருடன் வசித்துவரும் இரண்டு மாதக் குழந்­தை­யொன்று திடீர் திடீ­ரென தானா­கவே தீப்­பற்றி எரிந்து வரு­கி­றது. இதனால், அக்­கு­ழந்­தையின் உடலில் பல இடங்­களில் தீக்­கா­யங்கள் ஏற்­பட்ட போதிலும், சில நாட்­க­ளி­லேயே அவை தானாக சரி­யாகிவிடு­வ­துடன் குழந்­தைக்கும் எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது இருப்­பது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

வைத்­தி­யர்­களே வியப்­ப­டைந்­தி­ருந்­தி­ருக்கும் இக்­கு­ழந்தை விவகாரம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

விழுப்­புரம் மாவட்­டத்தைச் சேர்ந்த கர்ணன் – ராஜேஸ்­வரி தம்­ப­தியின் இரண்டு மாத ஆண் குழந்தை ராகுல்.

ஒருநாள், ராஜேஸ்­வரி தன் தாய் வீடான மோழி­ய­னூரில் தங்­கி­யி­ருந்த­ போது, ராகுலின் உடம்பில் திடீ­ரென தீப்­பி­டித்தது. இதன்­போது வீடும் தீப்­பற்றி எரிந்­தது. இதில் ஒரு­வாறு குழந்­தையை மீட்ட ராஜேஸ்­வரி, சிகிச்­சைக்­காக மருத்­துவ­ம­னையில் அனு­ம­தித்தார்.

இதனைத் தொடர்ந்து குழந்­தை யின் உடல் இரண்டு முறை தீப்­பி­டித்து எரிந்­தது. இதற்கு, பில்லி சூனி­ய­மாக இருக்­கலாம் என அக்­கம்­பக்­கத்­தினர் பய­மு­றுத்­தி­ய­தை­ய­டுத்து, புதுச்­சேரி அபி­ஷே­க­பாக்­கத்தில் உள்ள உற­வினர் வீட்டில், குழந்­தை­யுடன் ராஜேஸ்­வரி தங்­கினார். ஆனால், அங்கும் இரண்டு முறை குழந்­தைக்கு தீப்­பி­டித்­தது.

இந்­நி­லையில், செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று இரவு, திண்­டி­வனம் அருகே உள்ள கர்­ணனின் சொந்த ஊரான டி.பரங்­க­ணியில் தங்­கி­யி­ருந்­த­போதும், மர்­ம­மான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்­த­துடன் வீடும் எரிந்­துள்­ளது. இதனால், மன­மு­டைந்த ராஜேஸ்­வரி, தற்­கொ­லைக்கு மு யன்ற நிலையில் தற்போது மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இது­கு­றித்து குழந்­தைக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தியர் கூறு­கையில், ``இரண்டு மாதக் குழந்­தைக்கு, நான்கு முறை உடலில் பல இடங்­களில் தீக்­காயம் ஏற்­பட்டு ஆரோக்­கி­ய­மாக இருப்­பது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. குழந்­தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்­லைகள் இல்லை. தீக்­காயங்­களும் சில நாட்­களில் சரி­யாகி விடு­கின்­றன. இது, புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது'' என்றார்.

தந்தை கண்ணீர்

குழந்தையின் தந்தை கர்ணன் கூறுகையில், ``ராகுல், பிறந்­ததில் இருந்தே ஒவ்­வொரு நாளும் ஏதா­வது ஒரு விப­ரீதம் இடம்­பெற்று வரு­கி­றது. எங்கு கொண்டு சென்­றாலும், எங்­களை ஊருக்குள் சேர்க்கவே பயப்படுகின்றனர். இதனால், எங்கள் குடும்பத்தினர் மன உளை ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல