வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.புகைப்படங்கள் தேர்வு ஆகிவிடும். நீங்கள் கிளிக் செய்யும் புகைப்படம் வலதுபுற விண்டோவில் பெரியதாக ப்ரிவியூ தெரியும்.




புகைப்படங்களை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து கீழே உள்ள டைம்லைன் விண்டோவில் விடவும். உங்களுக்கு புகைப்படங்கள் வரிசையாக வரும். பிறகு இதில் உள்ள ப்ராஜெக்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் Main.Audio.Templates ஆகிய மூன்று டேப்புகள் ஓப்பன் ஆகும். இதில் உள்ள மெயின் கிளிக் செய்திட உங்களுக்கு புகைப்படத்தின் அளவு மற்றும் ஸ்லைட் டியூரஷன் டைம் மற்றும் டிரான்ஸ்ஷக்ஷன் டைம் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஆடியேர் தேர்வு செய்து நம்மிடம் உள்ள நமக்கு விருப்பமான பாடலினை தேர்வு செய்யவும்.இறுதியாக ஓ.கே.தரவும்.




உங்களுக்கான பணி நடைபெறுகையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.




இறுதியாக இதில் உள்ள பப்ளிஷ் கிளிக் செய்திட நமக்கு யூடியூப் மற்றும் ஏவிஐ ஆப்ஷன் கிடைக்கும் நமக்கு தேவையானதை கிளிக் செய்திட நமக்கான வீடியோ புகைப்படம் கிடைக்கும. யூடியூப் பில் பதிவேற்றம் செய்திட நாம் யூடியூப் அக்கெவுண்ட்டில் நுழைந்து பதிவேற்றம் செய்யலாம். இது முற்றிலும் இலவச சாப்ட்வேர் ஆகும்.

வேலன்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல