பலஸ்தீனத்தைச் சேர்ந்த கலில் சிரியாடா என்ற இளைஞன் பேஸ்புக் இணையத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஒன்று தொடர்பில் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.
அதுவும் அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க்கின் கணக்கினூடாகவே அக்குறைபாடினை காட்டியிருந்தார். ஷூக்கர் பேர்க்கின் கணக்கினுள் ஊடுருவி தகவலொன்றையும் பதிந்திருந்தார்.
ஆரம்பத்தில் குறித்த குறைபாடு தொடர்பாக அவர் பேஸ்புக்கிற்கு அறிவுறுத்தல் விடுவித்திருந்த போதிலும் அந்நிறுவனம் அது தொடர்பில் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
இதனையடுத்தே கலில் சிரியாடா அக்குறைபாட்டினை வெளியுலகிற்கு காட்டியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
பொதுவாக இணைய நிறுவனங்கள் தமது தளங்களில் காணப்படும் குறைபாடுகளை நிரூபிப்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையொன்றை வழங்குவதை பழக்கமாகக் கொண்டுள்ளன.
பேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் கலில் சிரியாடாவுக்கு ஊக்குவிப்புத் தொகையொன்றை வழங்க பேஸ்புக் மறுத்து விட்டது.
இந்நிலையில் கலில் சிரியாடாவுக்கு ஊக்குவிப்புத் தொகையொன்றை வழங்கும் பொருட்டு ஹெக்கர்கள் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சைபர்பாதுகாப்பு நிறுவனமான 'பியோண்ட்டிரஸ்ட்' இன் சிரேஷ்ட தொழிநுட்ப அதிகரியான மார்க் மைபிரட் இதற்கான நிதித்திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் 10,000 அமெரிக்க டொலர்களை திரட்டும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 9,000 அமெரிக்க டொலர்களை திரட்டப்பட்டுள்ளதுடன் மார்க் மைபிரட் 2,000 அமெரிக்க டொலர்களை தனது பங்காக வழங்கியுள்ளார்.
கலில் சிரியாடா உயர் கல்லூரி படிப்பை முடித்து பின்னர் தானாக ஹெக்கிங் கற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக