எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வெற்றி பெற வாழ்த்து அல்லது ஊக்கச் செய்தி வழங்க யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம் மறுத்து விட்டது.
நல்லூரை தலைநகரமாக கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முடிக்கு உரிய மன்னனாக இன்று அறியப்படுபவர் இராஜா ரெமிஜியஸ் கனகராஜா. ஆரியச் சக்கரவர்த்தியின் குடும்பம் இவரை யாழ்ப்பாண மன்னன் என்று பிரகடனப்படுத்தி உள்ளது.
சங்கிலி மன்னனின் 28 ஆவது வாரிசு என்று மிகுந்த பெருமையுடன் எப்போதும் கூறிக் கொள்கின்ற இராஜா ரெமிஜியஸ் கனகராஜா யாழ்ப்பாண அரச குடும்பத்தின் முடிக்கு உரிய மன்னன்தான் என நெதர்லாந்து அரசு அங்கீகரித்து உள்ளது. இராஜா ரெமிஜியஸ் கனகராஜா நெதர்லாந்தை வதிவிடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
உலகில் உள்ள பல அரச குடும்பங்களும் இவரை யாழ்ப்பாண அரச குடும்பத்தின் முடிக்கு உரிய மன்னன் என்று ஏற்றுக் கொண்டு இவருடன் அரச தொடர்புகளை பேணி வருகின்றன.
இவரை தாய்நாடு, இலங்கைநெற், வீரகேசரி, தினமின போன்ற ஊடகங்கள் அண்மைய காலங்களில் பேட்டி கண்டு உள்ளன. பேஸ் புக், ருவிட்டர் போன்ற சமூக இணைப்புத் தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல், தொலைபேசி, தொலைநகல் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஏராளம் தமிழர்கள் இவருடன் தொடர்பில் இருந்து வருகின்றார்கள்.
இந்நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் இவரை நேரடியாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துச் செய்தி வழங்க வேண்டுமென பல தடவைகள் கேட்டு உள்ளனர்.
ஆயினும் விக்னேஸ்வரனுக்கு இராஜா ரெமிஜியஸ் கனகராஜா வாழ்த்துச் செய்தி வழங்கவில்லையென அரச குடும்பத்துக்கு மிக நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து இராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை தொடர்பு கொண்டு பேசியபோது மக்கள் இத்தேர்தலில் சரியானவர்களையே தெரிவு செய்ய வேண்டும், மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி போன்றவற்றுக்கு உதவி செய்து வருகின்றவர்களை மக்கள் அறிந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார் இராஜா ரெமிஜியஸ் கனகராஜா.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன செய்து உள்ளது? என்று கேள்வி எழுப்பினார் இராஜா ரெமிஜியஸ் கனகராஜா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக