பெற்றோலில் இயங்கும் தனது சொந்த ஜீப்பிற்கே டீசலை அடிக்க வழிகோலிய விக்கி ஐயா எப்படி வடக்கிலுள்ள பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார் எனும் பெருத்த சந்தேகம் வடபுலத்தில் பரவலாக எழுந்துள்ளது. ஒரு சிறு சாதாரண விடயத்திற்கே இந்த நிலைமை என்றால் பாரிய பொறுப்பை இவர் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஆரம்ப சகுனமே அபசகுனமாக உள்ளது. ஐயா வேணுமென்றே பப்பிளிசிட்டிக்காக இப்படிச் செய்திருக்கலாம். அல்லது கூட வந்த சாரதியே ஐயாவை இராத்திரி வேளையில் நடுத்தெருவில் நிறுத்தி அழகு பார்க்க இப்படிச் செய்திருக்க வேண்டும். அல்லது ஐயாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த கூட்டமைப்பிலுள்ள சிலர் முன் கூட்டியே டீசல் நிரப்புபவருடன் பேசிச் சதி செய்திருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பது சம்மந்தப்பட்ட வர்களுக்கே வெளிச்சம். விக்கிரமவின் மக்கள் சேவையும் இப்படித்தான் போலத் தெரிகிறது.தினகரன் நாளிதழ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக