ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

சரும நிறக் குறைபாடுகளை சரிசெய்யும் எளிய வீட்டு மருத்துவங்கள்!!!

வைரங்களூம், வைடூரியங்களும், தங்க நகைகளும் தான் பெண்களுக்குப் பிடித்தவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மீண்டும் ஒருமுறை நன்றாக எண்ணிப் பாருங்கள். மாசு மருவில்லாத மென்மையான சருமமும், தெளிவான மேனி நிறமும் தான் அவர்கள் மிகவும் விரும்புவது. ஆனால் ஒரு சில நேரங்களில், சருமத்தில் ஒரு சில இடங்களில் திட்டு திட்டாக வெள்ளைப் புள்ளிகளும், சரும வண்ணத்தில் மாறுபாடான நிலைகளும் காணப்படும்.

இத்தகைய சரும வண்ண மாறுபாட்டிற்கு ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. கடைகளில் விற்பனை செய்யப்படும் வேதிப்பொருட்கள் கலந்த மருந்துகளை உபயோகிக்கத் தொடங்கும் முன், நாங்கள் சொல்லும் சில எளிய வீட்டு மூலிகை மருத்துவங்களை முயற்சி செய்து பாருங்கள். அழகுநிலையம் சென்று அழகுபடுத்திக் கொண்டது போன்ற அழகு மிளிர்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள்.

சரும நிற இழப்பு ஏற்பட காரணம்
சருமத்தில் வெள்ளை வண்ணத் திட்டுக்கள் ஏற்படக் காரணம் என்னவென்றால், சருமத்தின் அடியில் உள்ள மெலோனின் என்னும் வண்ணம் தரும் பொருளின் குறைபாட்டால், அவ்விடத்தில் நிறம் இழப்பது தான். இதன் காரணமாக சருமத்தில் சமமற்ற நிறம் நிலவுகிறது. இது பரம்பரை குறைபாடாகவும் இருக்கலாம். சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்பது, மன அழுத்தம், பருக்களால் வந்த காயங்கள், தழும்புகள், ஹார்மோன் அளவில் மாறுபாடுகள், சுற்றுப்புறச் சூழல் மாசு ஆகியவைகள் காரணமாகக் கூட, இந்த நிற இழப்பு ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?


அதிக நேரம் வெயில் படுமாறு நிற்காதீர்கள்.

குறைந்தபட்சம் SPF 30 உள்ள வெயில் தடுப்பு க்ரீம்களை தினமும் பூசிக் கொள்ளுங்கள்.

அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சன் ஸ்க்ரீன் க்ரீம்களை பூசிக் கொள்ளுங்கள்.

இரவுகளில் ட்ரெடினாய்ன் (tretinoin) அல்லது கோஜிக் (kojic) போன்ற அமிலங்களைக் கொண்ட க்ரீம்களைப் பூசிக் கொள்ளத் தவறாதீர்கள்.

கேரட்டை நன்கு அரைத்து பேஸ்ட் போலாக்கி, அதனுடன் சிறிது முல்தானி மெட்டி சேர்த்து பசை போலாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு வைட்டமின் சி மாத்திரையைப் பொடியாக்கி கலந்து கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் தடவிக் கொண்டு இருபது நிமிடங்கள் வைத்திருங்கள். இறுதியில் நல்ல தண்ணீரால் அலசுங்கள். இம்முறையை வாரந்தோறும் செய்து வாருங்கள்.

4 தேக்கரண்டி பால் பவுடரை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு விட்டு பசையாக்குங்கள். அத்துடன் சிறிது கிளிசரினும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நிறமிழந்த பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஹைட்ரஜன் பெராக்ஸைடும், கிளிசரினும் கடைத் தெருவில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் தான்.

ஒரு உருளைக்கிழங்கினை எடுத்துக் கொண்டு, அதன் தோலை உரித்துக் கொள்ளுங்கள். அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து, அதனை முகத்தில் தேயுங்கள். நிறமிழந்த பகுதிகளின் மீது அழுத்தித் தேயுங்கள். இதனால் சருமத்தில் உள்ள நிறமிழந்த பகுதிகளை மறையச் செய்யும் தன்மை உருளைக்கிழங்கிற்கு உண்டு.

சிறிது ஓட்ஸை எடுத்துக் கொண்டு, நன்கு தூளாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தக்காளிச் சாறு சேர்த்து, இக்கலவையை வாரமொரு முறை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வாருங்கள். வெண்புள்ளிகள் மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

துளசி இலைகளையும், எலுமிச்சை சாற்றினையும் கலந்து, பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வாருங்கள்.

ஆலிவ் எண்ணெயில் சிறிது சர்க்கரை சேர்த்து, இதனை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தேயுங்கள். சர்க்கரை கரையும் வரை தேயுங்கள். அதிலும் இதனை கைகள், கால்கள், கழுத்து என்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேய்க்கலாம்.

எலுமிச்சை சாறு, தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றினை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து கொள்ளுங்கள். இக்கலவையைக் கொண்டு 15 நிமிடங்கள் முகத்தினை மசாஜ் செய்யுங்கள். இதனால் பொலிவான முகம் உங்களுடையதாகும்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்கி, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும்.

பப்பாளிக் காயை பச்சைப் பாலுடன் கலந்து, முகத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வாருங்கள். முகத்தில் உள்ள வெண்புள்ளி மற்றும் கரும்புள்ளிகளை இது நீக்கும்.

தினமும் மோரினால் முகத்தைக் கழுவுவது கூட, முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்கும்.
மேற்கூறிய எளிய வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள கருமைகள் மற்றும் வெண்தழும்புகள் குறையும். முறையான சருமப் பராமரிப்பு, சமச்சீரான ஆரோக்கியமான உணவு மற்றும் சிறிது முன்னெச்சரிக்கை ஆகியவை சருமமானது பளபளப்புடனும், பொலிவுடனும் திகழ உதவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல