வியாழன், 3 அக்டோபர், 2013

பொது இடங்களில் உச்சா போவது, மூக்கை நோண்டுவது கூடாது: சீன பயணிகளுக்கு அரசு உத்தரவு

வெளிநாடுகளுக்கு செல்லும் சீன சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மூக்கை குடைவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளை கவர பல நாடுகள் விருப்பமாக உள்ளன. ஆனால் அவர்களின் அநாகரீகமான செயல்கள் பிற நாட்டவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சீனர்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு 64 பக்கங்கள் கொண்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • சுற்றுலா செல்லும்போது பொது இடங்களில் மூக்கை நோண்டி சீனாவின் பெயரைக் கெடுக்கக் கூடாது என்று சீனர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.

  • குளங்களில் சிறுநீர் கழிப்பது, விமானங்களில் வழங்கப்படும் லைஃப் ஜாக்கெட்டுகளை திருடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது என்று சீனர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

  • பொது கழிவறைகளை பயன்படுத்தும்போது வெகுநேரம் அங்கேயே இருந்து விடக் கூடாது என்றும், கழிவறையை அசுத்தம் செய்துவிட்டு வரக் கூடாது என்றும் சீன மக்களக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • சூப் குடிக்கையில் பாத்திரத்தை கையில் எடுத்து அப்படியே குடிக்கக் கூடாது என்றும், நூடுல்ஸ் சாப்பிடுகையில் சர் புர் என்று சத்தம் போடக் கூடாது என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
  • பொது இடங்களில் பல்லை குடைவதும் கூடாது என்று சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு நாடுகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து தான் சீன அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல