புதன், 27 நவம்பர், 2013

டாஸ்க் பாரும் டூல் பாரும்

டாஸ்க் பாரும் டூல் பாரும்: டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம்.

இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது.

ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும். இதிலேயே குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது.

இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால் புரோகிராம்கள் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம் சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம்.

ஆன்டி வைரஸ் புரோகிராம் மற்றும் சில தொடங்கும்போதே இயக்கப்படும் புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகாரத்தின் மணி இதில் காட்டப்படும்.

டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல