புதன், 27 நவம்பர், 2013

வேர்ட் டிப்ஸ்

வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.

1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும்.

2. டயலாக் பாக்ஸின் இடது பிரிவில், Save என்பதில் கிளிக் செய்திடவும்.

3. வலது பக்கத்தில் உள்ள Default File Location என்ற பீல்டில், Browse பட்டனை அழுத்தவும்.இப்போது வேர்ட் காட்டும் டயலாக் பாக்ஸில், பிரவுஸ் செய்து டைரக்டரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த டைரக்டரியை ஸ்டார்ட் அப் டைரக்டரியாகப் பயன்படுத்த விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்தடுத்து இருமுறை ஓகே பட்டனை கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி, மாறா நிலை டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்திடும் டைரக்டரியாக அமைக்கப்படும்.

மெனு பட்டன்களை இடம் மாற்ற: நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.

இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

டேபிளில் பார்டர்கள் தேவையா?: வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவை யில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.

பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும்.

ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல