இலங்கையில் கடந்த வாரம் காமன்வெல்த் மாநாடு நடந்து முடிந்தபின், இலங்கை தொடர்பாக ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கிட்டத்தட்ட இலங்கையை எச்சரிக்கும் பாணியில் பேசிவிட்டு காலக்கெடுவும் கொடுத்துவிட்டு செல்ல, அதே காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த ஆஸ்திரேலிய அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷே ஆகியோரை சந்தித்து, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, இலங்கைக்கு இரு பெரிய ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை துன்புறுத்துகிறது என்ற குரல்கள் தமிழக அரசிடம் இருந்தும், தமிழக கட்சிகளிடமும் இருந்து எழுந்துவரும் நிலையில், இரு பெரிய பே-வகுப்பு ரோந்துப் படகுகளை (large Bay Class patrol vessels) இலங்கை கடற்படைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போர்ட்.
கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான SLNS சாயுரா என்ற கப்பலுக்கு விஜயம் செய்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
இந்த விஷயம் தமிழக அரசியல் வட்டாரங்களை இதுவரை எட்டவில்லையோ, என்னவோ, தெரியவில்லை. தமிழக அரசியல் வட்டாரங்களில் இருந்து, இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகு கொடுத்தது குறித்து இதுவரை யாருடைய எதிர்ப்பு குரலையும் காணோம்.
அதை விடுங்கள். ஆஸ்திரேலிய பிரதமர் கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான SLNS சாயுரா என்ற கப்பலில் ஏறி இந்த அறிவிப்பை செய்தார் என்று சொன்னோமல்லவா, அந்த SLNS சாயுரா கப்பல், இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் எட்டு ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்த ஆபரேஷனில் கலந்துகொண்ட கப்பல்களில் ஒன்று.
சரி, இந்த SLNS சாயுரா கப்பலை இலங்கைக்கு யார் கொடுத்தார்களாம்?
சாட்சாத் இந்தியாவேதான்!
இந்தியக் கடற்படையின் விசாகபட்டினம் வீர்பாகு (INS Virbahu) கடற்தளத்தில் INS சராயு என்ற பெயரில் இயங்கிய கப்பல்தான், இலங்கைக்கு கொடுக்கப்பட்டு, SLNS சாயுரா என்று லேசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சராயு – சாயுரா) இலங்கை கடற்படையால், இயக்கப்படுகிறது.
தற்போது இலங்கை – இந்திய கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் எல்லை கடந்து இலங்கைக்குள் வராமல் இருக்க ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்களில் இதுவும் ஒன்று.
எப்படிங்க இருக்கு இந்த சமாச்சாரம்? மன்மோகன் சிங் கொழும்பு போனாலென்ன.. போகாமல் விட்டாலென்ன..
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக