செவ்வாய், 19 நவம்பர், 2013

துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞர்: விவரம் தெரிந்தால் உடலை ஒப்படைக்க உதவுங்களேன்

துபாய்: துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் பற்றிய விவரம் தெரிந்தால் துபாய் ஈமான் அமைப்பிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் (வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாயில் உள்ள ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயிர் இழந்தார். ஆனால் அவரது உடலைக் கேட்டு இதுவரை யாரும் வரவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த துபாய் ஈமான் அமைப்பினர் சேகர் தங்கராஜ் குறித்த விபரங்களை அறிந்து அவரது உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் காணும் சேகர் தங்கராஜ் குறித்த தகவல் தெரிந்தவர்கள் துபாய் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா 050 467 43 99 மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். அல்லது info@imandubai.com எனும் மின்னஞ்சல் முகவரியில் சேகர் பற்றிய விவரங்களை தெரிவித்து உதவலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல