வெள்ளி, 29 நவம்பர், 2013

பயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...

பல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.

இந்த பிரச்னைக்கு தீர்வு தரும் சிறிய புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் swept away

http://lifehacker.com/255055/lifehackercodesweptawaywindows என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், பயன்படுத்தாத விண்டோக்களைத் தானாகவே, குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் மினிமைஸ் செய்துவிடுகிறது.

தொடக்கத்தில் இந்த கால இடைவெளி 300 விநாடிகளாக இருக்கிறது.

இதனைக் குறைக்கலாம் மற்றும் அதிகப்படுத்தலாம்.

சில வேளைகளில், நாம் பயன்படுத்தா விட்டாலும் சில விண்டோக்கள் அப்படியே இருக்க விரும்புவோம். மினிமைஸ் செய்யப் படாமல் வைத்திருக்க எண்ணுவோம். அதற்கும் இந்த ஸ்வெப்ட் அவே புரோகிராம் வழி தருகிறது.

இத்தகைய விண்டோக்களின் புரோகிராம்களுக்கான பட்டியலை விதிவிலக்கு புரோகிராம்களாகப் பட்டியல் செய்து வைத்துவிடலாம். அப்போது அந்த விண்டோக்கள் மினிமைஸ் செய்யப் படாமல் விடப்படும். இயக்கப்படும் புரோகிராம்களுக்கான டாஸ்க் பார் டேப்பில், ரைட் கிளிக் செய்து, அவற்றை இந்த விதிவிலக்கு பட்டியலில் சேர்க்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல