முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் ஆர்வலர்கள் குவிந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கும் ஆர்வலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஓரிருவர் காயமடைந்தனர்.
பின்னர் நெடுமாறன் உட்பட இருபது பேர் தஞ்சையில் ஒரு மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் நெடுமாறன் உட்பட இருபது பேர் தஞ்சையில் ஒரு மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
உரிய அனுமதி பெற்றபிறகே முள்ளிவாய்க்கால் முற்ற வளாகம் அமைக்கப்பட்டதாகவும் சில உள்நோக்கங்களுக்காக தமிழக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது, இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என நெடுமாறன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவளித்து தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையும் இடித்தளித்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவின் கோர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது என்று மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் ஜெயலலிதா மீது காறித்துப்புவார்கள் என வைகோ தெரிவித்தார்.
ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச்சமம்.
முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது வைகோ கண்டனம் தெரிவித்தார்.
எந்த வித முன்னறிவுப்புமின்றி அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துத் தகர்த்த காவல் துறையின் பின்னணியில் தமிழக அரசு உள்ளதை மறுப்பதற்கில்லை என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது வைகோ கண்டனம் தெரிவித்தார்.
தமிழர்களின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்தமை யாரும் அனுமதிக்க முடியாது என்பதுடன், தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலமாகி இருப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக