வியாழன், 12 டிசம்பர், 2013

1ம் வகுப்பு மாணவிக்கு முத்தம் கொடுத்த 6 வயது சிறுவன் சஸ்பெண்ட்



அமெரிக்க பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள கேனன் நகரில் லிங்கன் ஸ்கூல் ஆஃப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ஹன்டர் எல்டன் என்ற 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்துவிட்டான். இதற்காக பள்ளி நிர்வாகம் எல்டனை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது. சிறுவனின் செயல் பாலியல் அத்துமீறல் என்று பள்ளி தெரிவித்துள்ளது.

இது குறித்து எல்டனின் தாய் ஜெனிபர் சான்டர்ஸ் கூறுகையில்,எனது மகன் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததற்காக முன்பு ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டான். தற்போது மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதை பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது பாலியல் அப்படி என்றால் என்ன என்று என் மகன் என்னிடம் கேட்கிறான் என்றார்.

சிறுவன் எல்டன் கூறுகையில்,எனக்கு அந்த சிறுமியை பிடித்திருக்கிறது. வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அந்த சிறுமியின் கையில் முத்தம் கொடுத்தேன். இது தான் நடந்தது என்றான்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல