பாலர் பாடசாலையில் தன்னால் கண்டெடுக்கப்பட்ட பற்றரியை விழுங்கியதால் 13 மாத பாலகன் ஒருவன் உடலினுள் குருதி பெருக்கெடுத்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
லெயிசெஸ்டரிலுள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்த வஸம் நூர்வெலி என்ற பாலகனே சம்பவதினம் வாயிலிருந்து குருதியை கக்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மரணமாகியுள்ளான்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் 3 வோல்ட் பற்றரியொன்று பாலகனது வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இது தொடர்பில் வஸமின் தந்தை அம்மர் (32 வயது) விபரிக்கையில், தமது வீட்டில் அத்தகைய பற்றரி எதுவும் இருக்கவில்லை எனவும் அந்தப் பாலகன் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட பாடசாலையிலேயே அந்த பற்றரி இருந்திருக்கலாம் என நம்புவதாகவும் கூறினார்.
பாலகன் பற்றரியை இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பு விழுங்கியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக