செவ்வாய், 10 டிசம்பர், 2013

பசை தடவப்பட்ட டாய்லெட்டில் ஒட்டிக் கொண்ட பெண்

நியூயார்க்கில் மர்மநபர்கள் குறும்புத்தனமாக கழிவறையில் பசை தடவி வைத்து விட, அதை அறியாமல் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவின் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த கழிவறையின் மீது யாரோ மர்ம நபர்கள் பசையை ஒட்டவைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற ஒரு பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்தக் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

கழிப்பறையின் மீது பசை ஒட்டப் பட்டிருப்பது தெரியாமல் அதன் மீது அப்பெண் அமர்ந்துள்ளார். இதனால், அப்பெண்ணின் உடல் பாகங்கள் கழிப்பறையோடு ஒட்டிக் கொண்டது. அப்பெண் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண்ணால் கழிப்பறையிலிருந்து எழுந்திரிக்க இயலவில்லை.

கழிப்பறையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்ட தகவலறிந்த அங்காடி நிர்வாகம், உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள், கஷ்டப் பட்டு அப்பெண்ணைக் கழிப்பறையில் இருந்து பிரித்தெடுத்தனர்.

பின்னர், அப்பெண் மேல்சிகிச்சைக்காக கெயினெஸ்வில்லே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

கழிப்பறைகளில் அக்காடி நிர்வாகத்தினர் நடத்திய சோதனையில், அங்குள்ள ஒரு கழிப்பறையின் ஓரத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பசைப்பை ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. கழிப்பறைகளில் பசையை தடவிய நபர்கள் குறும்புக்காக இவ்வாறு செய்தார்களா அல்லது அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பழி வாங்க இவ்வாறு சதி செயல்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று வேறொரு அங்காடியிலும் பசை தடவப் பட்ட கழிவறையில் சிக்கி ஒருவர் பாதிக்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல