புதன், 11 டிசம்பர், 2013

மண்டேலா நினைவு கூட்டத்தில் ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்ப (படங்கள் இணைப்பு)

மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு கூட்டம் ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள எப்.என்.பி. அரங்கில் நேற்று நடந்தது. அரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள், தென்னாப்பிரிக்க மக்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டமாக இருந்தது.

இந்நிலையில் அரங்கில் நடந்த ஒரு விஷயம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, டென்மார்க் பிரதமர் ஹெல்லி தார்னிங் ஸ்மிட், இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் ஆகியோருடன் அமர்ந்திருந்தார். ஒபாமா ஸ்மிட் மற்றும் மிஷலுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.

மண்டேலா மறைவு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மேடையில் உருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒபாமா, ஸ்மிட் மற்றும் கேமரூன் செல்போனில் தங்களை தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மண்டேலா மறைவு குறித்து பலர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் ஒபாமா ஸ்மிட்டுடன் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அருகில் உம்மென்று இருக்கும் மிஷலை பார்க்கையில் ஒபாமாவின் சேஷ்டை அவருக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது.

ஒரு பெரிய தலைவரின் நினைவு கூட்டத்திற்கு சென்ற இடத்தில் ஜாலியாக போட்டோ எடுத்துக் கொண்டு பெண் தலைவருடன் சிரித்து பேசிய ஒபாமாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல