வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும்.
இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது.
அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும்.
வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.
அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.
டேபிள் வரிசை அகலத்தை மவுஸ் கொண்டு அமைக்க: வேர்ட் புரோகிராமைப் பயன்படுத்தி டாகுமெண்ட் அமைக்கும் போது, டேட்டாவினை வகைப்படுத்தும் வகையில், அவை செல்லில் எடுத்துக் கொள்ளும் இடத்திற்கேற்ப, செல்களின் அகலத்தினை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இதனை எப்படி மவுஸ் கொண்டு அமைப்பது எனப் பார்க்கலாம்.
இது வேர்ட் புரோகிராம் எந்த பதிப்பு என்பதனைப் பொறுத்தும் மாறலாம். இங்கு பொதுவான சில வழிகளைப் பார்க்கலாம்.
மிக எளிய வழி எதுவென்றால், மவுஸ் பாய்ண்ட்டரை, மேலாகக் காட்டப்படும் வரிசைக்கான பார்டரில் வைத்து இழுத்தால், அகலம் அதிகமாவும், குறைவாகவும் மாறும். வேர்ட் 97ல் இருந்து இந்த வழி நமக்குக் கிடைத்து வருகிறது. இந்த செல்களின் அகலம், அதிகப்படுத்தப்பட்டாலும், குறைக்கப்பட்டாலும், டேபிளின் மொத்த அகலம் மாறுவதே இல்லை.
அடுத்து வந்த பதிப்புகளில், எந்த வரிசையினை மாற்றுகிறோமோ அது மட்டுமே மாற்றப்படும். மற்றவை மாறாது.
ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு, வரிசையின் பார்டரை மவுஸ் பாய்ண்ட்டர் கொண்டு இழுத்தால், அந்த பார்டருக்கு இடது புறம் உள்ள வரிசையின் அகலம் மாறும். மற்ற எந்த வரிசையின் அகலமும் மாறாது.
கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, வரிசையின் பார்டரை இழுத்தால், பார்டருக்கு இடது புறம் உள்ள வரிசையின் அகலம் மாற்றப்படும்.அதே நேரத்தில், டேபிளின் வலது புறத்தில் உள்ள வரிசைகளின் பார்டர்கள், மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கேற்ப, இவற்றின் அகலம் அதிகமாக்கப்படும் அல்லது குறைக்கப்படும். மொத்த டேபிள் அகலம் மாறாது.
கண்ட்ரோல் + ஷிப்ட் கீகளை அழுத்திக் கொண்டு, டேபிள் வரிசை ஒன்றின் பார்டரில் இழுத்தால், இடதுபக்கம் உள்ள வரிசையின் அகலம் மாற்றப்படும்.வலதுபுறம் உள்ள வரிசைகளின் அகலம் சரி சமமாக மாற்றி அமைக்கப்படும். டேபிளின் மொத்த அகலம் மாறாது.
ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு பார்டரில் வைத்து இழுத்தால், சாதாரணமாக பார்டரை இழுத்தால் என்ன நடக்குமோ அதுவே நடக்கும். இங்கு ஒரு மாற்றம் காட்டப்படும். மேலாக டேபிளின் அகலம், ரூலரின் கோட்டில் எண்களில் காட்டப்படும்.
ஆல்ட்+ஷிப்ட் கீகளை அழுத்திக் கொண்டு, மவுஸ் பாய்ண்ட்டரால் இழுத்தால், எந்த மாற்றமும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக