திங்கள், 27 ஜனவரி, 2014

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சன்மானம்!- தந்தை அறிவிப்பு!!

ஹாங்காங்கில் கட்டுமான கம்பெனியின் அதிபராக உள்ளவர் செசில். இவரது ஒரே செல்ல மகள் கிகிக்கு 33 வயது. கிகி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரை திருமணம் செய்பவருக்கு ரூ. 815 கோடி கொடுக்கப்படும் என்று செசில் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இது போன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று செசில் கூறியதை அடுத்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது நினைவுக் கூறத்தக்க்து.



ஒரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ. 815 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று ஹாங்காங்கை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்ளாக உரிய வரன் கிடைக்காத நிலையில் தற்போது தொகையை அதிகரிக்க அவர் பரிசிலித்து வருவதாக மலேசியன் பைனான்சியல் பப்ளிகேஷன் தகவல்கள் தெரிவித்துள்ளது. எப்படியாவது தனது மகளின் மனதில் இடம் பிடிக்கும் ஆண்மகனுக்கு மேலும் வழங்கப்படும் தொகை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று அவர் அறிவித்துள்ளர்.

நான் எனது மகளின் சுதந்திரமான வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை. அவளை ஒரு நல்ல முறையில் திருமணம் செய்யது கொடுக்க வேண்டும் மற்றும் எனது தொழிலை வழிவழியாக நடத்த வாரிசு வேண்டும் என்று செசில் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கிகியின் மனதில் இடம் பிடிப்பவருக்கு கூடுதல் பணம் வழங்கப்படும் என்று செசில் அறிவித்திருப்பது கிகியின் தற்போதையை பெண் பார்ட்டனர் சீன் ஏவ் மிகவும் சங்கடமாகியுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கிகியும் “எனது தகப்பனாரின் இந்த அறிவிப்பின்படி என்னை வசீகரிக்கும் ஆண் மகன் கிடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார். தந்தையின் இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும், அவர் மீது மிகுந்த அன்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். கிகி கடந்த 2012-ம் ஆண்டு சீன் ஏவ் என்ற பெண்ணை பிரான்சில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹாங்காங்கில் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் கிகியின் மனதில் இடம் பிடிக்கும் ஆவலுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் கிகியின் மனதை மாற்றவில்லை. மேலும் கிகி இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு தனது தந்தையுடன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல