யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை (20.01.2014) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை வழமை போன்று பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த இந்த மாணவி தனது பெற்றோர் வெளியில் சென்ற சமயம் வீட்டின் சுவாமி அறைக்குள் சென்று துணியினால் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இறந்தவர் யாழ். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகளாவார். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக