சனி, 18 ஜனவரி, 2014

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் வாரிசு பரிதாப மரணம்!

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரின் வாரிசான பிருதிவிராஜ் வறுமையில் வாடி வேலூரில் நேற்று மாரடைப்பால் இறந்தார். மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தமிழ் மன்னர்கள் கி.பி.,1739 1815 வரை கண்டியில் ஆட்சி செய்தனர்.



இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரமராஜ சிங்கன். இவர் மீது நான்கு முறை போர் தொடுத்த ஆங்கில அரசு இறுதியில் கண்டியை கைப்பற்றி மன்னனையும் ஏழு பட்டத்தரசிகளையும் கைது செய்து கப்பல் மூலம்,தமிழகம் கொண்டு வந்தது.

1816 இல் வேலூர் கோட்டையில் கண்டி மகாலில் விக்கிரமராஜ சிங்கன் சிறை வைக்கப்பட்டார். கடந்த 1832 ஜனவர் 30 ஆம் திகதி விக்ரமராஜசிங்கன் இறந்தார். இவரது உடல் வேலூர், காட்பாடி ரோடு, பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டு கல்லறை கட்டப்பட்டது. 1843 இல் இறந்த இவரது மகன் ரங்கராஜாவுக்கும் அருகில் கல்லறை அமைக்கப்பட்டது.

கண்டி மகாலில் அடைக்கப்பட்டு இருந்தபோது ரங்க ராஜாவுக்கு பிறந்தவர்தான் பிருதிவிராஜ். வாரிசுகள், ஒவ்வொருவராக இறந்த பின் பிருதிவிராஜை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கண்டி மகாலை விட்டு வெளியேறிய பிரதிவிராஜ் வேலூர், சாயிநாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்தார்.

கூலி வேலைக்கு சென்று பி.ஏ படித்தார். தியேட்டர்களில் மேலாளராக பணியாற்றிய பிருதிவிராஜுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசிடம் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்க மன்னனின் வாரிசு என்று தெரிவித்து ஏதாவது உதவி செய்ய கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பிருதிவிராஜ் அனுப்பி உள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சத்துவாச்சாரியில் தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழிக்கும் வேலை செய்து வந்த இவர் விபத்தில் காலில் அடிபட்டதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேர்ந்தது.

74 வயதான பிருதிவிராஜ் நேற்று காலை 7:40 மணிக்கு மாரடைப்பால் இறந்தார். தியேட்டரில் மேலாளராக பணியாற்றியபோது புஷ்பா என்ற பெண்ணை மணந்த பிருதிவிராஜுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் மின்சார தொழினுட்பவியலாளராகவும், இன்னொருவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சுகாதார ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல