செவ்வாய், 21 ஜனவரி, 2014

விடுகதைகளுக்கு ஒரு இணையதளம்

விடுகதைகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் தன்மை உடையவை. இதற்கு நாடு, இனம், மொழி என்பது ஒரு தடை அல்ல. இணையத்தில் விடுகதைகளையும், சிரிப்பு துணுக்குகளையும் கொண்டு பல தளங்கள் உள்ளன. அவற்றில் அண்மையில் நான் பார்த்தது சற்று வேறுபாடாகத் தோன்றியது. அதனை இங்கு காணலாம்.



GRiN அல்லது Good Riddles Now எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தளத்தினை http://goodriddlesnow.com என்ற முகவரியில் காணலாம்.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், அன்றைய விடுகதை உங்களை வரவேற்கிறது. கூடவே, அன்றைய ஜோக்கும் தரப்படுகிறது. இதே முகப்புப் பக்கத்தில், அண்மையில் இந்த தளத்தில் வெளியான விடுகதைகள் தரப்பட்டு அதற்கான விடைகளைக் காண உங்களை சிந்திக்க வைக் கிறது. தெரியாவிட்டால், அல்லது உங்களுக்குத் தெரிந்தது சரியா எனப் பார்க்க, கீழாகக் கிளிக் செய்தால், விடை கிடைக்கிறது. எடுத்துக் காட்டாக, நான் பார்த்த போது கிடைத்த விடுகதை:

கனடாவில், ஒரு விதவையின் கணவன், அவளுடைய தங்கையை திருமணம் செய்திட முடியுமா? உண்மையைச் சொல்வதென்றால், இந்த விடுகதையைக் கேட்டவர்கள், கனடா நாட்டு சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்று தான் கேட்டார்கள், யோசித்தார்கள். ஒருவர் மட்டுமே விதவையின் கணவன் எப்படி உயிரோடு இருக்க முடியும். கணவன் இறந்ததனால் தானே, அவள் விதவை ஆகிறாள் என்று பதில் அளித்தார்.

இதே போல பல விடுகதைகள் இந்த தளத்தில் உள்ளன. சில சிரிப்பினை வரவழைப்பதற்காகத் தரப்பட்டுள்ளன.

உங்களின் வலது கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுப் பழமும், இடது கையில் நான்கு ஆரஞ்சுப் பழங்களும், மூன்று ஆப்பிள்களும் இருந்தால், நீங்கள் என்ன வைத்திருப்பீர்கள்? இதற்கான விடை- பெரிய கைகளை வைத்திருப்பீர்கள்.

உங்களுடைய விடைகளை இந்த தளத்திற்கு அனுப்ப, உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறந்து பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், லாக் இன் செய்த பின்னரே பதிலை அனுப்ப முடியும்.

நீங்கள் படித்த ஜோக் அல்லது விடுகதையினை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறீர்களா? இதற்கான சமூக இணையத் தளங்களுக்கான லிங்க் கீழேயே தரப்படுகின்றன.

அந்த வகையில் Facebook, Twitter, மற்றும் Google + ஆகியவற்றிற்கான லிங்க்குகள் கிடைக்கின்றன.

இதனைக் காண, படிக்க, பதில் தர ஆர்வமாக உள்ளதா? உடனே இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல