புதன், 5 பிப்ரவரி, 2014

ஒபாமா கூட மோடி பேச்சை கேட்கிறார்: ஃபேஸ்புக்கில் பரவும் போலி போட்டோ

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசுவதை அமெரிக்க அதிபர் ஒபாமா டிவியில் பார்ப்பது போன்ற உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி உள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் பேச்சை டிவியில் பார்ப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒபாமா கூட நமோவின்(நரேந்திர மோடி) பேச்சை கேட்கிறார் என்று தலைப்பிட்டு அந்த புகைப்படம் உள்ளது.

உண்மையில் இது போலியான புகைப்படம். கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பேசியதை வெள்ளை மாளிகையில் உள்ள டிவியில் ஒபாமா பார்த்த போது எடுத்த படத்தை தான் மாற்றி மோடியின் உருவத்தை பொருத்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த போலி புகைப்படத்தை பகிர்ந்து கொண்டவர்களில் குஜராத் மாநிலம் நவசரியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சி.ஆர்.பாட்டீலும் அடக்கம். அவரிடம் இது குறித்து கேட்டதற்கு, இந்த புகைப்படம் போலி என்று தனக்கு தெரியாது எனவும், ஃபேஸ்புக்கில் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல