சனி, 8 பிப்ரவரி, 2014

சூப்பரான... மாம்பழ குல்பி

தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்
கன்டென்ஸ்ட்டு மில்க் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால், கன்டென்ஸ்ட்டு மில்க், சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை அணைத்து, அதனை குளிர வைக்க வேண்டும்.

கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவில் வைத்து, 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து, பின் வெளியே எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில் இருந்து எடுத்து பரிமாறினால், சூப்பரான மாம்பழ குல்பி ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல