மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய கடலுக்கு வந்தது என்ற ஊகம் ஏன்?
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய புலனாய்வு தொடர்பாக மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. மீடியாக்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகின்றன. இந்த விமான மறைவு தொடர்பாக புலனாய்வில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் இருந்து நேரடியாக கிடைக்கும் தகவல்களை, (நாமும் விமானத் துறையுடன் தொடர்புடையவர்கள் என்பதால்) சரியாக ஆராய்ந்த பின்னரே விறுவிறுப்பு.காமில் வெளியிடுகிறோம்.
மலேசியன் விமான மாயம் பற்றி மீடியாக்களில் ஏராளமான taleகள் தாராளமாக உள்ளன. அந்த taleகளில் சில பரபரப்புக்காக எழுதப்படுபவை. அவற்றை எழுதுபவர்களில் பலருக்கு ‘விமானம் பறக்கும்’ என்ற அறிமுகத்துக்கு அப்பால், விமானம் பற்றி பரிச்சயம் கிடையாது. இதனால், மலேசியன் விமான மாயம் பற்றி மீடியாக்களில் வரும் சகல taleகள் பற்றியும் நாம் எழுதுவதில்லை.
சில வாசகர்கள், “ஏங்க.. மலேசிய விமான காக்பிட்டுக்குள் கழுத்துவரை தண்ணீரில் பைலட் இருந்ததை யாரோ பார்த்ததாக ‘…’ மீடியாவில் போட்டிருக்காங்களே.. பாவமுங்க, நம்ம இணையதளத்துக்கு தகவல் கிடைக்கலிங்களா?” என்று இமெயில் அனுப்புகிறார்கள்.
அதற்கு நாம் வேண்டுமானால், “ஆமாங்க.. பைலட்டு, உடனே தமது பாக்கெட்டில் இருந்த கோபால் பற்பொடி எடுத்து, காக்பிட் தண்ணீரில் பல் துலக்கினாருங்க” என்று தனிப்பட்ட பதில் அனுப்பலாமே தவிர, விறுவிறுப்பு.காமில் கட்டுரையாக எழுத முடியாது.
உலக சிவில் ஏவியேஷன் வரலாற்றிலேயே, சமீப காலத்து மிகப்பெரிய மர்மம் இந்த மலேசியன் விமான மாயம். ஒருவேளை விமானத்தை கண்டுபிடித்தாலும், முழு உண்மைகளும் வெளியாக நாளாகும். சிலவேளைகளில் உண்மையே வெளியாகமல் போகலாம். அல்லது உண்மை திரித்து கூறப்படலாம். கடந்த காலங்களில் இதற்கெல்லாம் பல உதாரணங்கள் உள்ளன.
சரி. இந்த நிமிடத்தில், இந்த விமான மாய மறைவு தொடர்பாக புலனாய்வாளர்களின் போகஸ் எங்கேயுள்ளது?
விமானத்தில் இருந்து தொலைத்தொடர்பு ராடார்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தெளிவற்ற சிக்னல்கள் சில, மலேசிய விமானம் தனது பாதையில் இருந்து விலகி, ஆயிரக்கணக்கான கி.மீ. மேற்கே சென்றதையே காட்டுகிறது.
தற்போது புலனாய்வாளர்களின் ஊகம் என்னவென்றால், இந்த விமானம் இந்தியக் கடல் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, எரிபொருள் தீர்ந்து விட்டிருக்கலாம் என்பதே.
இது, மலேசியத் தரப்பினால் கூறப்பட்டது அல்ல, அமெரிக்க ஏவியேஷன் புலனாய்வாளர்களின் தரப்பில் இருந்து கிடைத்த தகவல்.
விமானம் தரையுடன் ஏற்படுத்திய இறுதித் தொடர்பை (மலேசிய டவருடன்) அடுத்து, விமானத்தில் இருந்து தொலைத் தொடர்பு சிக்னல்களை ட்ரான்ஸ்மிட் செய்யும் ட்ரான்ஸ்பொன்டர் (inflight transponder) செயலிழந்தது, அல்லது, செயலிழக்க வைக்கப்பட்டது என்ற தியரி, அனைத்து புலனாய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விமானத்தின் காக்பிட் பகுதியில் உள்ள இந்த ட்ரான்ஸ்பொன்டரை, விமானிகள் பயன்படுத்தும் சொற்பதத்தில் ட்ரான்ஸ்மிட்டர் ரெஸ்பொன்டர் (transmitter responder) என்பார்கள்.
இது என்ன செய்யுமென்றால், விமானத்துக்கு ராடார் ஒன்றில் இருந்து சிக்னல்கள் வரும்போது, விமானத்தில் இருந்து வித்தியாசமான ஒரு சிக்னலை கீழே அனுப்பி வைக்கும்.
ட்ரான்ஸ்மிட்டர் ரெஸ்பொன்டரில் இருந்து தரைக்கு வரும் இந்த யுனீக் சிக்னல்களை சிவிலியன் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவர்களில் யாரும் ஃபாலோ பண்ணுவதில்லை. காரணம், அங்குள்ள உள்வாங்கும் தொழில்நுட்பத்திலும் இந்த சிக்னல்களை உள்வாங்கும் ராடார்கள் (செகன்டரி ராடார்) இருந்தாலும், இதை ட்ராக் பண்ணும் விதத்தில் செட் பண்ணப்படுவது இல்லை. இந்த சிக்னல்கள் அவர்களுக்கு தேவையும் இல்லை.
ஆனால், உங்களால் ஒரு ராணுவ டவரின் பதிவுகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் குறிப்பிடும் யுனீக் சிக்னல்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.
எப்படியென்றால் இவை ஒரே மாதிரியான நான்கு இலக்க கோட்களில் (unique four-digit codes) இருக்கும்.
காக்பிட்டில் விமானி தனது ரேடியோ தொடர்பை துண்டித்தாலும், இந்த நான்கு இலக்க கோட்கள், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கீழே ட்ரான்ஸ்மிட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், இது எந்தவொரு உரையாடலையோ, டேட்டாவையோ கீழே அனுப்பும் சிக்னல் அல்ல.
உரையாடலையோ, டேட்டாவையோ கீழே அனுப்பாமல் எதற்கு சிக்னல் போகிறது என்று குழப்பமாக உள்ளதா? இதை கொஞ்சம் எளிமையாக சொல்ல வேண்டுமானால், உங்கள் கம்ப்யூட்டர் சரியான வேகத்தில் இயங்குகிறதா என பார்ப்பதற்கு Pinging அல்லது Ping command கொடுப்பதை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? இதுவும் கிட்டத்தட்ட அப்படியான ஒரு ‘பிங்க்’ செயல்பாடுதான்.
விமானத்தின் ட்ரான்ஸ்மிட்டர் ரெஸ்பொன்டரில் இருந்து குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கீழே போகும் இந்த 4 இலக்க கோட்கள் சொல்வதெல்லாம், “ஹேய்.. நான் தொடர்பில் இருக்கிறேன்” என்பதுதான். அதாவது, அட்டென்டன்ஸ் மார்க் செய்கிறது.
தரையில் உள்ள ராணுவ ரிசீவிங் சென்டர்களில் பதிவாகியுள்ள இந்த சிக்னல்களை வைத்துதான், மலேசியன் விமானம் தனது பாதையில் இருந்து விலகி, ஆயிரக்கணக்கான கி.மீ. மேற்கே சென்றது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
சிக்னல் கிடைத்துள்ள புவியியல் அமைவிடம் (geographical position) எங்கிருக்கிறது (இந்தியக் கடல்) என்பதையும், விமானத்தில் நிரப்பப்பட்டிருந்த எரிபொருளின் அளவையும் வைத்து, இந்தியக் கடலின் மேல் பறந்தபோது, விமானத்தில் எரிபொருள் தீர்ந்திருக்கலாம் என்கிறார்கள், அமெரிக்க ஏவியேஷன் புலனாய்வாளர்கள்.
இந்த விளக்கம், மலேசிய விமானம் மாயமானது குறித்த ஒரு தெளிவை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறோம். கீழேயுள்ள வரைபடத்தை பார்த்தால், மேலும் தெளிவு ஏற்படும்:
விறுவிறுப்பு.காம்
மாயமான மலேசிய விமானம் (1)
மாயமான மலேசிய விமானம்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக