ரியாத்: கடந்த 2010ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 5 இந்தியர்களை உயிருடன் புதைத்ததாக 3 பேர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள காதிப் பகுதியில் இருக்கும் பண்ணை ஒன்றில் குழி தோண்டியபோது அதில் 5 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ஒருவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
5 ஊழியர்கள் கைகள் கட்டப்பட்டு பண்ணை வீட்டு வரவேற்பு அறையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம். அப்போது என்னுடன் இருந்த நண்பர் அவர்களின் கைகள் ஏன் கட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்கு விருந்து அளித்தவரிடம் கேட்டார். அதற்கு அவர், அநத் 5 பேரில் ஒருவர் ஸ்பான்சரின் மகள் மற்றும் சில பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். நான் அந்த 5 இந்திய ஊழியர்களை பார்த்தபோது அவர்களின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் சுயநினைவின்றி இருந்தனர்.
நாங்கள் பக்கத்து அறைக்கு சென்று மது அருந்தினோம். அப்போது ஒருவர் கத்தும் சத்தம் கேட்டு வந்து நான் அவரை கன்னத்தில் அறைந்தேன். அதன் பிறகு என்னுடன் வந்த நண்பர் அந்த ஊழியரை கம்பால் அடித்தார். அவருக்கு ரத்தம் வரும் வரை அடித்தார். உடனே அந்த 5 பேரையும் வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்று நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்கினோம். நாங்கள் மது அருந்திக் கொண்டும், புகைபிடித்துக் கொண்டும் அவர்களை அடித்தோம்.
உடனே எங்களுக்கு விருந்து அளித்தவர் பண்ணை நுழைவாயிலில் உள்ள கேட்டுக்கு பின்னால் இருக்கும் குழியில் அந்த 5 பேரையும் உயிருடன் புதைத்துவிடலாம் என்றார். இதையடுத்து அவர்களின் கை, கால்களை கட்டி, வாயில் டேப் ஒட்டி குழியில் உயிருடன் புதைத்தோம். அப்போது அவர்களின் ஐ.டி. கார்டுகளையும் குழியில் போட்டுவிட்டோம். காலை தொழுகைக்கு நேரம் ஆனதால் நானும், என் நண்பரும் சென்றுவிட்டோம் என்றார்.
இந்த சம்பவம் கடந்த 2010ம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக