சனி, 8 மார்ச், 2014

தாயின் கடன் அட்டையில் 7 இலட்சத்துக்கு நிஜ குப்பை அகற்றும் வாகனத்தை கொள்வனவு செய்த 5 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)

குப்பைகளை சேகரித்தல் அவற்றை மீள் சுழற்சிக்குட்படுத்தல் என்பவற்றில் தீவிர ஆர்வம் கொண்ட 5 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தாயாரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 7 இலட்சத்து 63 ஆயிரத்து 344 ரூபா பெறுமதியான நிஜமான குப்பை அகற்றும் வாகனமொன்றை ஈபே இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.



கேம்பிரிட்ஷியரின் கிரேட் பக்ஸ்டன் எனும் இடத்தைச் சேர்ந்த வில்லியம் பேட்மான் என்ற மேற்படி சிறுவனுக்கு தனது வீட்டிற்கு வெளியே குப்பை அகற்றும் பணியாளர்கள் பணியாற்றுவதைப் பார்த்து அவர்கள்பால் கவரப்பட்டு தானும் எதிர்காலத்தில் ஒரு குப்பை அகற்றும் பணியாளராக தொழில் புரிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வில்லியமின் தாய் புலெயர் பேட்மனான் (45 வயது) ஈபே இணையத்தளத்தை பார்வையிட்டு விட்டு அதனது தொடர்பை துண்டிக்காமல் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த இணையத்தளத்தை பார்வையிட்ட சிறுவன் தனது தாயாரின் கடனட்டையைப் பயன்படுத்தி அந்த இணையத்தளத்தினூடாக தனக்கு பிடித்தமான நிஜ குப்பை அகற்றும் வாகனத்தை கொள்வனவு செய்துள்ளான்.

ஏற்கெனவே வில்லியம் தாயாரின் இணையத்தளத்தை பயன்படுத்தி விளையாட்டு குப்பை அகற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பழகியிருந்தமை காரணமாக அதே வழிமுறையினை பின்பற்றி அவனுக்கு நிஜமான குப்பை லொறியை இலகுவாக கொள்வனவு செய்ய முடிந்துள்ளது.

3500 ஸ்ரேலிங் பவுணுக்கு நிஜ குப்பை அகற்றும் லொறியை தனது மகன் கொள்வனவு செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த புலெயர் வாகன கொள்வனவை இரத்துச் செய்ய பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல