சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து சடலத்தை தந்துதவுமாறு உறவினர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்முனை, நற்பட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற குடும்ப பெண் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த ஆண்டு ஐனவரி மாதம் 25ம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
இவர் கடந்த ஆண்டு ஐ_லை மாதம் 14ம் திகதி சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாக ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி அவரின் வீட்டிற்கு தகவல் அனுப்பபட்டிருந்தது. அத்தினத்தில் அவரின் அப்பாவும் இறந்துள்ளார்.
துக்கத்தில் இருக்கும் போது மற்றும் ஒரு துக்கச் செய்தியும் அவர்களின் வீட்டிற்கு கிடைத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முதல் தொலைபேசியில் பேசிய அவர் எவ்வாறு இறந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உடன் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு உடலை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு கணவர் காத்தமுத்து வேதானந்தம் முறைப்பாடு செய்திருந்தார்.
பிரேத பரிசோதனையில் அவர் இருதய நோய் காரணமாக இறந்துள்ளதாக கடந்த 2014.ஐனவரி 20ம் திகதி மருத்துவ அறிக்கையின் பிரதிகளை வெளிநாட்டு அமைச்சு கணவருக்கு அனுப்பியுள்ளார்கள்.
அதன் பின்னர் உடலை உடன் இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு கேட்டு சம்மதக் கடிதத்தினை அமைச்சுக்கு கணவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை. மரணம் அடைந்து சுமார் 8 மாதகாலமாகியும் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படாதுள்ளது.
இதனால் அவரின் குடும்பத்தினர் செய்வதறியாது உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்;ளார்கள். இவர்களின் நிலமையினை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட பெண்ணின் உடலை உடன் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தருமாறு உரிய அரச அதிகாரிகளிடம் அவரின் மகள் வே.கேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித்தாபனத்திடம் சென்றும் முறையிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் இவரது சடலத்தை தருவித்துக் கொடுக்குமாறு மனித அபிவிருத்தித்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக