மாயமான மலேசிய விமானத்துக்கு என்னதான் நடந்திருக்கும்? வல்லுநர்கள் சொல்வது என்ன?
239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்துக்கு என்னதான் நடந்திருக்கும்? அது தீவிரவாதிகளால் வெடித்து சிதறடிக்கப்படதா? கடலில் மூழ்கடிக்கப்பட்டதா? என்பது குறித்த விடை இன்னமும் கிடைத்தபாடில்லை..
239 பயணிகளுடன் மலேசிய விமானம் மாயமாகிப் போனதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வான்பரப்பும் கடற்பரப்பும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இன்னமும் அந்த விமானத்துக்கு என்னதான் நடந்தது என்பது பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லை.
மலேசியாவும் சீனாவும் இந்த விமான விபத்து குறித்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றன. மலேசியாவோ, 2009ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்க 5 நாள் ஆனது. 2007ஆம் ஆண்டு மகாசார் ஜலசந்தியில் விழுந்த ஆடம் ஏரின் விமானத்தைக் கண்டுபிடிக்க 7 நாளானது என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் மாயமான விமானம் குறித்து அத்தனை தகவல்களையும் எப்படி வழங்குவது என்றும் கேள்வி எழுப்பி பீதி கிளப்புகிறார் மலேசிய அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி. இந்நிலையில் மாயமான விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து கேப்டன் எஸ்.எஸ். பானேசர் கருத்து தெரிவிக்கையில், மாயமான மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி திட்டமிட்டு தகர்த்திருக்கலாம் அல்லது செயற்கைக் கோளின் பாகங்கள் ஏதேனும் மோதி பெரும் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்.
மேலும் விமானத்தின் காக்பிட்டில் ஏதாவது அவசரம் எனில் 7700 என்ற குறியீட்டு அலைவரிசையை அழுத்தினால் 200 மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுமே உடனே உஷார்படுத்தப்படும். அப்போது அந்த விமானம் எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது? அதன் வேகம்? செல்லும் திசை அனைத்துமே கண்காணிக்கப்படும். அதே நேரத்தில் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் அந்த அவசர அலைவரிசை எண் டிரான்ஸ்பாண்டரை திட்டமிட்டு நிறுத்தினால் விமானம் எந்த திசையில் பறக்கிறது என்ற தகவல் மட்டுமே கிடைக்குமே தவிர அதன் வேகம், எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது என்ற விவரம் கீழே உள்ள விமான நிலையங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.
ஒருவேளை வானில் பறந்து கொண்டிருந்த போது அதாவது 29 ஆயிரம் அடி முதல் 60 ஆயிரம் அடி வரை பறந்து கொண்டிருக்கும் போது அதன் மீது ஏதேனும் மோதி விபத்துக்குள்ளானால் ராடாரில் அது மாயமான இடம் தெரியவரும்.
ஒருவேளை அது வெடித்து சிதறியிருந்தால் 5 நாட்களாகியுமா அதன் பாகங்கள் கிடைக்காமல் போயிருக்கும்? என்ற கேள்வியும் எழுகிறது. மிக அதிக உயரத்தில் பறக்க வைத்து வெடிக்கச் செய்திருந்தால் அதன் பாகங்கள், உடல்கள் கடலில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்திருக்கலாம். அதை உலக நாடுகளின் கடற்படை வீரர்கள் கண்டுபிடிக்க முடியும் என்றாலும் மிகுந்த செலவுக்குரிய விஷயமாகிவிடும் என்கிறார் பானேசர்.
மலேசிய விமானம் கடத்தி, மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா அச்சம்
மலேசிய விமானம் மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள். விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
விமானம் மாயமான பிறகு கூடுதல் மைல்கள் பயணித்துள்ளதால் அதை யாராவது கடத்தி,
விமானத்தையும், பயணிகளையும் ரகசியமான இடத்தில் வைத்து கடத்தியவர்கள் பிறகு ஏதாவது பயன் பெற நினைக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க தீவிரவாத தடுப்பு படைகள் விசாரணை நடத்தி வருகின்றன.
விமானம் மாயமாகிவிட்டது: மலேசிய அரசு அறிவிப்பு
கோலாலம்பூர்: மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், விமானம் மாயமாகிவிட்டது என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. இந்நிலையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கூறி சீனா 3 செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
ஆனால் அந்த புகைப்படங்கள் தவறுதலாக வெளியாகிவிட்டன என்றும், அது அரசு ஆதரவுடன் வெளியிட்டது இல்லை என்றும் கோலாலம்பூரில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் குறித்த உண்மையை கூறுமாறு சீனா மலேசியாவிடம் கேட்டுள்ளது. இந்நிலையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், விமானம் மாயமாகிவிட்டது என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் கூறுகையில்,
இது போன்று இதுவரை நடந்தது இல்லை. விமானம் மாயமாகிவிட்டது. அது மாயமானதில் இருந்து எந்த ஒரு சிக்னலும் அதில் இருந்து வரவில்லை. இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
மாயமான விமானம் கடலுக்குள் விழுந்து தரைதட்டியிருக்கும்: சீன ஆராய்ச்சியாளர்கள்
பெய்ஜிங்: மலேசியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள கடலின் அடிப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மாயமான விமானம் கடலுக்குள் விழுந்து தரைதட்டியிருக்கும்: சீன ஆராய்ச்சியாளர்கள் கடந்த 8ம் தேதி விமானம் எம்.ஹெச். 370 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கிளம்பியது. அந்த விமானம் தென் சீன கடல் பகுதியில் மாயமானது என்று கூறப்பட்டது. இதற்கிடையே விமானத்தை யாராவது கடத்தி வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமானம் மாயமான சனிக்கிழமை நள்ளிரவு 2.55 மணிக்கு மலேசியா மற்றும் வியட்நாம் மத்தியில் உள்ள கடலின் அடிப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விமானம் கடலில் விழுந்து தரை தட்டியிருக்கலாம். அதனால் தான் கடலின் அடியில் அந்த அதிர்வு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானம் மாயமானது குறித்து தினமும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகள் நோக்கி சென்றுள்ளது: புதிய தகவல்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை யாரோ வேண்டும் என்றே அந்தமான் தீவுகள் நோக்கி ஓட்டிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாயமான மலேசிய விமானம் விமானம் ஓட்டத் தெரிந்த யாரோ ஒருவரால் அந்தமான் தீவுகள் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத்தின் ரேடாரில் மாயமான விமானம் அந்தமான் நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஓட்டத் தெரிந்த யாரோ ஒருவர் விமானத்தை வழக்கமான பாதையில் இருந்து திருப்பி வேறு பாதையில் ஓட்டி சென்றுள்ளார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விமானம் கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சில மணிநேரத்தில் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் ஏன் வேறு பாதையில் சென்றது என்று புரியாமல் இருந்த நிலையில் அதை விமானி அல்லாமல் வேறு ஒருவர் ஓட்டியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்று மலேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்
இந்து சமுத்திரத்தில் தேடுதல் நடவடிக்கை
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடும் நடவடிக்கையை இந்து சமுத்திரத்தில் முன்னெடுக்க அமெரிக்க கடற்படை தனது கப்பலொன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்படி விமானம் ராடர் கருவிகளிலிருந்து மறைந்த தற்கு பின் பல மணித்தியாலங்களாக மேற்படி விமானம் அது தொடர்பிலிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமிக்ஞை ஒன்றை செய்மதியொன்றுக்கு அனுப்பி வைத்திருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வாய்ப்பு
மலேசிய எயார்லைன்ஸ் எம்எச் 370 விமானம் செய்மதிக்கு தரவுகளை அனுப்பாத போதும் சமிக்ஞைகளை அனுப்பியிருப்பது உண்மையாயின் அந்த விமானம் காணாமல் போன பின்னரும் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெகார்னி விபரிக்கையில் புதிய விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
புதிய தகவல்களின் பிரகாரம் இந்து சமுத்திரத்தில் புதிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
அதே சமயம் அமெரிக்க கடற்படையானது தனது நாசகார கப்பலான யு.எஸ்.எஸ். கிட்டை தாய்லாந்து வளைகுடாவிலான தனது தேடுதல் நிலையிலிருந்து மலேசிய மேற்கு கடற்கரைக்கு நகர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் மலேசிய அரசாங்கத்தின் வேண்டுகோளொன்றையடுத்து அந்நாட்டுக்கு தேடுதல் நடவடிக்கையில் உதவும் பணியில் இந்திய கடற்படை விமானப்படை மற்றும் கரையோர காவல்படை என்பன இணைந்துள்ளன.
விமானம் காணாமல் போனதற்கு பின் பல மணித்தியாலங்களாக அதன் இயந்திரங்களிலிருந்து தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க வோல் ஸ்றீட் ஜோன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போய் 4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞை
அத்துடன் மேற்படி போயிங் 777- 200 விமானத்தின் இயந்திர முறைமைகளும் விமானம் காணாமல் போனதற்கு பின் 4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞைகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஏபி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
போயிங் இயந்திரங்களானது பறக்கும் போது விமானம் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் செய்மதிக்கு தரவுகளை அனுப்பி வைக்கக்கூடியதாகும். இந்நிலையில் மேற்படி விமானம் காணாமல் போன பிற்பாடும் செய்மதிக்கு விமானம் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகளை அனுப்பிய வண்ணம் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் விமானம் இறுதியாக ராடர் கருவியிலிருந்து மறைந்த பின்னர் மேலும் 1600 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பறந்துள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். ஏனெனில் அந்த விமானம் காணாமல் போன பிற்பாடு சுமார் 4 மணித்தியாலங்களுக்கு பறப்பதற்கு தேவையான எரிபொருளை கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் இரு பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ஏ பி சி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் விமானத்திலிருந்த இரு தொலைத்தொடர்பாடல் முறைமைகளும் தரவுகளை பரிமாறிக் கொள்வதை வௌ;வேறு நேரத்தில் நிறுத்தியுள்ளதாகவும் இது அந்த விமானம் இயந்திரங்கள் செயலிழப்புக்குள்ளாகி பெரும் அனர்த்தத்தை சந்தித்திருக்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதியின் உதவியை நாடியது மலேசியா
மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கமந்திரவாதியின் உதவியை நாடியுள்ளது மலேசியா.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7அம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.
இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல மந்திரவாதியான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.
அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செயற்கைகோள் படங்கள்! மலேசியா நிராகரிப்பு
239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
காணமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா மூன்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பின்னரும் விமானம் நான்கு மணித்தியாலங்கள் பறந்ததாகத் தெரிகிறதென அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இவையிரண்டும் தவறானவையென மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹ_சைன் தெரிவித்தார்.
சீனா தவறுதலாக படங்களை வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். விமானத்தின் எஞ்சினை உற்பத்தி செய்த ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, அமெரிக்காவின் தகவல் தவறானதென தெரியவந்ததாக அவர் கூறினார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக