திங்கள், 24 மார்ச், 2014

கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானத்தின் “கருப்பு பெட்டி” எங்கே.. தேடல் தீவிரம்


கான்பெரா, ஆஸ்திரேலியா: மலேசிய விமானம் கடலில் மூழ்கிவிட்ட போதிலும் அதற்கான காரணங்கள் இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
அந்த முடிச்சை அவிழ்ப்பதற்கான சாவிகளைத் தேடி இன்னும் பல நாடுகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதில் முக்கியமாக கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் தேடல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

17 நாள் பிரார்த்தனை வீண்

17 நாட்கள் அனைவரின் வேண்டுதல்களையும் உடைத்து சுக்கு நூறாக்கி விட்டு தானும் உடைந்து நொறுங்கிப் போனது மலேசிய விமானம்.இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ள எம்ஹெச்370வின் "கருப்பு பெட்டி"யை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

பெயர்தான் இதற்குக் கருப்புப் பெட்டி. ஆனால், கருப்பு பெட்டி என்பது விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் அடங்கிய மஞ்சள் நிற பெட்டியாகும்.

விமானம் நொறுங்கினாலும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு செய்தி அனுப்ப இயலும்.ஆனால், வல்லுனர்கள் இந்த மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி தொடர்ந்து 15 நாட்களுக்கு செயல்பட்டு இருக்கிறது.அதனால் அதன் திறன் குறைந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

கருப்பு பெட்டி மட்டும் கிடைக்காவிட்டால் கண்டிப்பாக மலேசிய விமானத்தின் அழிவுக்கான காரணங்களை கண்டறிய இயலாது என்பதே உண்மை.

மலேசிய விமானம் விழுந்த இடம் இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டியை தேடி வருகின்றனர்.

"கருப்பு பெட்டி கிடைத்தால்தான் நல்லது" என்று கூறியுள்ளார் ஜான் கோக்லியா என்ற அமெரிக்காவின் முன்னாள் காவல்துறை அதிகாரி. "கருப்பு பெட்டியின் ஆயுள் முடிவதற்கு முன் அதனை கண்டுபிடிக்க வேண்டும்.கிட்டத்தட்ட ரேஸில் ஓடுவது போல் இதற்கான தேடுதல் நடக்க வேண்டும்"என்றும் அவர் கூறியுள்ளார்.

கருப்பு பெட்டியின் சிக்னலை பெறும் வகையில் அமெரிக்க கடற்படையினர் அதி நவீன கேட்கும் கருவியை கொண்டு தேடி வருகின்றனர்.

முன்பாக, அமெரிக்க கடற்படையின் தேடுதல் கருவி இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. 30 அடி நீளமுள்ள,உருளை வடிவம் உள்ள இந்த கருவி நீருக்கு அடியில் செலுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் கருப்பு பெட்டி வெளிப்படுத்தும் அந்த ஒலிவடிவிலான சிக்னலை 1 மைல் முன்பாக கண்டறிய இயலும்.ஆனால்,அதற்கு கருப்பு பெட்டி சிதைவடையாமல் இருக்க வேண்டும்.

2009இல் நடைபெற்ற பிரான்சு விமானத்தின் மறைவில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது.இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

தொடர்புடைய பக்கங்கள்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல