சென்னை: மலேசிய விமானம் கடலில் மூழ்கி 239 பேர் ஜலசமாதி ஆனதில் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி சந்திரிகா சர்மாவும் மரணித்துள்ளார். இதுநாள் வரை அவர் திரும்ப வந்துவிடுவார் என்று நம்பியிருந்த அவரது குடும்பத்தினர், இந்த தகவலினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து கடந்த 8ம் தேதி அதி காலை சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம், மாயமானது. 16 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளும் ஜலசமாதியாகிவிட்டனர். அவர்களில் 5 இந்தியர்களும் அடங்குவர்.
சென்னை தொண்டு நிறுவன நிர்வாகி
விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா (50) என்பவரும் சென்றுள்ளார். சென்னை வேளச்சேரியில் வசித்த சந்திரிகா ஷர்மா, இன்டர்நேஷனல் கலெக்டிவ் இன் சப்போர்ட் ஆப் பிஷ்ஸ் ஒர்க்கர்ஸ் (ஐசிஎஸ்எப்) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றியவர்.
சர்வதேச கருத்தரங்கம்
ஐ.நா. அமைப்பான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மங்கோலியாவில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது தான் விமான விபத்தில் சிக்கினார் இதுபற்றி தகவலறிந்ததும் சந்திரிகாவின் குடும் பத்தினர் சோகத்தில் மூழ்கினர். எப்படியும் திரும்ப வந்துவிடுவார் என்று நம்பியிருந்தனர்.
அதிர்ச்சியில் குடும்பத்தினர்.
ஆனால் சந்திரிகாவின் மரணம் பற்றிய தகவல் அறிந்த உடன் அவரது கணவரும், மகளும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். என்னால் இந்த தகவலை நம்ப முடியவில்லை என்று அவருடைய கணவர் கூறியுள்ளார்.
மீனவர் என்.ஜி.ஓ.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா, வேளச்சேரியில் நீண்டகாலமாக வசித்து வந்தார். அவருடைய கணவர் நரேந்திரன் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். மகள் மேக்னா டெல்லியில் பி.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். ஐசிஎஸ்எப் நிறுவனத்தில்19 ஆண்டுகளாக சந்திரிகா பணியாற்றினார். கடந்த 12 ஆண்டுகளாக நிர்வாக செயலாளராக இருந்தார்.
எளிமையானவர் சந்திரிகா
மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு இயக்கங் களில் சந்திரிகாவின் பங்களிப்பு பெரிது. சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்களை சாதாரண மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தார். அனைவரிடமும் எளிமையாக பழகு வார் என்று தொண்டு நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மீனவர் திட்டங்கள்
‘‘உலகில் நடக்கும் மீனவர்கள் தொடர் பான பிரச்சினைகள், திட்டங்களை எங்களிடம் சந்திரிகா ஷர்மா எளிமையான முறையில் எடுத்துரைப்பார். அவரது ஆலோ சனையும், செயல்பாடுகளும் எங் களுக்கு புத்துணர்வைத் தந்தன. அவர் ஆர்வமாக பணியாற்றுவார். அவர் இல்லாதது மீனவ சமுதாயத்துக்கு பேரிழப்பாகும் என்று தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய தலைவர் இளங்கோகூறியுள்ளார்.
Thatstamil
தொடர்புடைய பக்கங்கள்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக