தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் அரவிந்தன் படுகொலை தொடர்பாக புலிகள் இயக்க முக்கியஸ்தர் உட்பட நால்வர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்ப்ட்டு உள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி அரவிந்தன் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். சடலம் தன்னாமுனை களப்பு பகுதியில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தன்னாமுனை இளைஞன் ஒருவரை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை பிடித்து விசாரித்தனர். புலிகள் நிதிப் பொறுப்பாளராக செயற்பட்ட வசந்தகுமார் என்பவருடன் இன்னும் இருவரை தொடர்ந்து பிடித்தனர்.
அரவிந்தனை வசந்தகுமார் கழுத்து வெட்டி கொன்றமை விசாரணைகளில் தெரிய வந்தது. வசந்தகுமாருக்கும் அரவிந்தனுக்கும் இடையில் பிரச்ச்சினை ஏற்பட்டது. வசந்தகுமாரை தாக்க மூன்று இளைஞர்களை ஏற்பாடு செய்து இருக்கின்றார். இவ்விளைஞர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து உள்ளார்.
தொலைபேசி தொடர்பு கொண்டு தன்னாமுனை கடற்கரைக்கு அரவிந்தனை வரவழைத்தார். மூன்று இளைஞர்களும் அரவிந்தனை தாக்கியபோது இவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தனை வெட்டிக் கொன்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக