ஞாயிறு, 23 மார்ச், 2014

இராணுவத்தில் துன்புறுத்தப்பட்ட பெண் பயிலுனர்கள் தமிழர்கள் அல்லர்

இராணுவத்தில் புதிதாக சேர்ந்த பெண்களை ஆண் சிப்பாய்கள் துன்புறுத்துகின்றமையை காட்டுவதாக வெளிவந்த வீடியோ உண்மையானது என இராணுவம் ஒப்புக் கொண்டு உள்ளது.



இவ்வீடியோ 2002 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் தமிழர்கள் அல்லர், இத்துன்புறுத்தல்கள் தொடர்பாக குற்றவாளியாக காணப்படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளது.

அனுராதபுரத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கே துன்புறுத்தல்கள் நேர்ந்து உள்ளன, தமிழர்கள் யாரும் அப்போது சேர்க்கப்பட்டு இருக்கவில்லை, தமிழர்கள் யாருக்கும் அப்போது அனுராதபுரத்தில் பயிற்சி வழங்கப்படவில்லை, இராணுவ சட்ட ஒழுங்குகளை எவர் மீறி செயற்பட்டாலும் சகிக்க முடியாது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்து உள்ளார்.

இராணுவ தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொண்ட புலனாய்வில் வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இவர் கூறினார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல