வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தன் சமூகத்தைத் தானே அழித்தல்!

கடந்த வெள்ளிக்கிழமை, நெடுங்கேணி வெடிவைச்சகல் காட்டுப் பகுதியொன்றில், அதுவரை தேடப்பட்டுவந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அம்மூவரில் தேவியன் என்பவர் 2007 ஏப்ரலில் கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் ஒக் டோபரில் அநுராதபுரம் விமானப்படை தளத்தின் மீதும் தாக்கு தல் நடத்திய புலிவிமானிகளில் ஒருவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.



அதேவேளை கடந்த இரண்டு மாதங்களாக புலிகள் அமைப் புக்காக பிரசார வேலைகளில் ஈடுபட்டதாகவும், வெளிநாடுகளி லிருந்து நிதி பெற்றுக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி வடபகு தியில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கடந்த வியாழனன்று கூறியிருந்தார்.

புலிகள் அமைப்பிற்கு வெளிநாடுகளில் தலைமை தாங்கு வதாகக் கூறப்படும் நெடியவனின் இரண்டு முக்கிய சகாக்களில் ஒருவரான நந்தகோபன் எனப்படும் கபிலன் கைது செய்யப்பட்டு மார்ச் 6ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பாது காப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மீண்டும் புலிகள் அமைப்பைக் கட்டுவதற்கு முயற்சிக்கப்படு வதாகக் கூறும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டிற்கு, நமது தமிழ்த் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் செய்த பிரதிபலிப்பு, இவையெல்லாம் அரசாங்கத்தினதும் பாதுகாப்புத் தரப்பினதும் திட்ட மிட்ட நாடகங்கள் என்பதே!

இந்த வங்குரோத்துத் தமிழ் அரசியலின் விளைவாக நடந் தது என்ன? நெடுங்கேணியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வத்தைக் கண்டிக்கவும் முடியவில்லை அதுபோன்று இனியும் நிகழாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்று பேசவும் முடிய வில்லை.

(மூவரும் தேடப்பட்டதே நாடகம் என்றால், இல்லாதவர்கள் இறந்ததை எப்படி ஒப்புக்கொள்வது என்ற குழப்பம் இவர்க ளுக்கு? பிரபாகரன் இறந்ததை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து விட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாமல் முழிபிதுங் கும் வெறுவாய்கெட்ட அரசியல் தந்திரங்கள்தானே தமிழர்க்கு வாய்த்த சாபக்கேடு!)

அத்துடன் இதுபோல இளைஞர்களைக் காவுகொடுப்பதெல் லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டுமல்லவே. வன்முறைக்குத் தூண்டும் விதமாக தமிழ் இளைஞர்களை உசுப்பி விடுவதும், பின்னர் அவர்களது வன்முறையை நியாயப்படுத்தி அரசுக்குச் சவால் விட்டுப் பேசுவதும், பிறகு அவர்கள் கொல்லப்படும் போது வாளாவிருந்து, அந்தக் கொலைகளையும் அழிவுகளையும் தமது பதவி அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையும் தானே இவர்கள் காலம் காலமாகச் செய்துவருகிறார்கள்?

அதேபோன்றுதான் மீண்டும் வன்முறையை இங்கு உரு வாக்கி, வெளிநாட்டில் பழையபடி நிதிச் சேகரிப்பை அதிகப்ப டுத்த முயற்சி நடக்கிறது என்றும் அதற்காக நாட்டிற்குள் சிலர் வந்திருக்கிறார்கள் என்று தேடுதல் நடந்த போது, ஜெனிவாவுக் காக இங்கே நாடகம் நடக்கிறது என்று அறிவித்ததோடு இவர் களது சமூக அக்கறை முடிந்துவிட்டது.

மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் அல்ல என்று கூற இதுவரை எவரும் முன்வரவில்லை. கைது செய்து விடுவிக்கப்பட்ட கோபியின் தாயாரைப் பற்றி எவரும் பரிந்து பேச வும் இல்லை. கோபிக்கும் நெடியவனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுவதை இதுவரை நெடியவனோ வேறு எவ ருமோ மறுக்கவும் இல்லை.

இவ்வாறு இளைஞர்கள் வன்முறையின் பக்கம் போகும்போது, என்ன ஏதென்று ஆராயாது உணர்ச்சிகரமாக அரசை எதிர்த்துப் பேசுவதன் மூலம் மறைமுகமாக அவர்களைத் தூண்டிவிடுவதும், அதனால் விளையும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு எந்தவொரு வகையும் செய்யாமல், அதைத் தங்கள் வாக்கு வேட்டைக்கு லாபமாக்கிக் கொள்வதும்தான் நடக்கிறது. தன் சமூகத்தைத் தானே அழிக்கும் வங்குரோத்து அரசியல் தானே இது? இதைத்தானே இவர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள்!

ஆசிரியர் தலையங்கம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல