புதன், 30 ஏப்ரல், 2014

பெண்ணாக மாறிய புலி உறுப்பினர் கைது!

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் பெண் வேடம் அணிந்து வவுனியா நகரில் சுற்றித் திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்பவரேவவுனியா, குட்ஷெட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்தே கைது இடம்பெற்றது. சிவப்பு நிற சுடிதார் அணிந்து, பொய் முடியிட்டு, தொப்பி அணிந்து ரமேஸ் காணப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

ஆயுதங்களை வைத்திருந்தார், கொள்ளைகளில் ஈடுபட்டார் ஆகிய குற்றச்சாட்டுக்களிலெயே இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். கடந்த முதலாம் திகதி அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி இரவு 11 மணி அளவில், இவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல