திங்கள், 14 ஏப்ரல், 2014

கட்டிலுக்கு கீழ் பதுங்கிய புலித் தலைவரின் கதை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட வலையமைப்பை சேர்ந்தவர்களை படைத் தரப்பினர் கடந்த வாரம் முறியடித்தனர்.



புலிகள் இயக்கத்தை மீள கட்டியமைக்கின்றமைக்கு திட்டமிட்டு, தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட குழுவினரே இவ்விதம் முறியடிக்கப்பட்டனர்.

குறிப்பாக இக்குழுவை முன்னெடுத்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். புலனாய்வு விவகாரத்துக்கு பொறுப்பான கோபி, இராணுவ விவகாரங்களுக்கு பொறுப்பான தேவிகன், பிரசார விடயங்களுக்கு பொறுப்பான அப்பன் ஆகியோரே கொல்லப்பட்டார்கள். நெடுங்கேணி காட்டில் இடம்பெற்ற சமரில் இவர்கள் இறந்தார்கள்.

புலிகளின் சுவரொட்டிகள் வடக்கில் பல இடங்களிலும் ஒட்டப்படன. தொடர்ந்து படையினரின் புலனாய்வுப் பிரிவினர் உஷார் அடைந்தனர். பின்பே இம்மூவர் குறித்த விபரங்கள் தெரிய வந்தன. முதலில் அப்பன் அடையாளம் காணப்பட்டார். இவர் மாவீரர் குடும்பங்கள், புலி ஆதரவு மனித உரிமையாளர்கள் ஆகியோரிடம் புகலிடம் பெற்றுக் கொள்கின்றமையில் அப்பன் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

கிளிநொச்சியில் தர்மபுரத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு அப்பனைத் தேடித்தான் கடந்த மாதம் 13 ஆம் திகதி பொலிஸார் சென்று இருந்தனர். ஆனால் வீட்டு உரிமையாளரான ஜெயகுமாரியின் கட்டிலுக்கு அடியில் கோபி காணப்பட்டார். கட்டிலுக்கு அடியில் மறைந்து இருந்தபடி பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பாலேந்திரன் ஜெயகுமாரி மனித உரிமைப் போராளியாக அறியப்படுபவர். ஆனால் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர். அப்பன் இவர்களை வசப்படுத்திக் கொண்டார்.

பாலேந்திரன் ஜெயகுமாரியின் கைது புலி ஆதரவு மனித உரிமை போராளிகளையும், புலம்பெயர் தமிழர்களையும் கோபப்பட வைத்தது. மனித உரிமைப் போராளிகள் தெரிந்தோ, தெரியாமலோ புலிகளுக்கு உதவுகின்றனர்.

தேவிகன் தமிழ்நாட்டில் இருந்து இயங்கி வந்திருக்கின்றார். தமிழ்நாடு புலிகளுக்கு காலம் காலமாக அடைக்கலம் கொடுத்து வந்திருக்கின்றது. தமிழ்நாடு அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இவர் நோர்வேயில் உள்ள நெடியவன், பிரான்ஸில் உள்ள விநாயகம் ஆகியோருடன் சேர்ந்து வேலை செய்தவர். இவர் அனுராதபுர விமான படை முகாம் உட்பட தென்னிலங்கையில் இடம்பெற்ற புலிகளின் தாக்குதல்கள் பலவற்றிலும் முக்கியமாக பங்கேற்றவர். நெடியவன், இரும்பொறை உள்ளிட்ட புலம்பெயர் புலி தலைவர்களின் வலையமைப்புக்களில் இருந்து இவர்களுக்கு நிதி கிடைத்தது. ஹவாலா என்கிற சட்டவிரோத முறை மூலம் இவர்களுக்கு நிதி வந்தது. இதை வைத்து வீடுகள், வாகனங்கள், கருவிகள் போன்றவற்றை வாங்கினார்கள்.

கனேடிய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடனேயே புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கின்ற முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இது குறித்த தகவல்கள் கனேடிய அரசை மிகவும் உஷார்ப்படுத்தி உள்ளன. குறிப்பாக கனேடிய தமிழர் காங்கிரஸ், ஈழ தமிழர்களுக்கான தேசிய பேரவை போன்றவற்றின் எதிர்கால செயற்பாடுகள் கேள்விக்குறி ஆகி உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல